Breaking News
recent

ரிட்டன் விசா 12

(டிஸ்சார்ஜ் ஆகி வந்து ஜமால் நோம்பு பிடிக்கிறேன்னு சொல்லியதும் சரிபா பிடிவாதமா தடுத்துடுறா,ஜமால் இது மாதிரி நோன்பு விடுவது அவனுக்கு நினைவுத்தெரிஞ்சி முதல் தடவை.ஜமாலுக்கு என்னவோ போல் இருக்கிறது.இப்ப2வது நோன்பும் வைக்க சகர் வந்துவிட்டதுஸகர் நேரமே இதை எழுதுகிறேன் -ஆசிரியர்)
**********************************************************************
சரிபா! நேத்துதான் நோன்பு பிடிகல,இன்னக்கி நான் நல்ல தான் இருக்கேன். ஆமா, நல்லா இருக்க சேதி!கை,காலெல்லாம் வீக்கம் குறையல. இப்ப விட்டத பொறவு புடிச்சுக்கலாம். கைய-கால வச்சுக்கிட்டு சும்மா இருங்க. காக்காவுக்கு போன் போட்டு சொல்லப்போறேன்.
மச்சான் எங்கே? ரஜினா இங்க இல்லையா எப்ப போனாங்க. ராத்தமாவுக்கு உடம்பு சரியில்ல,அதனால காக்காவும் ரஜினாவும் ராத்திரியே போய்ட்டாங்க.
மாமிக்கு என்னா? யான் என்ட சொல்லலே? -ஜமால்.
அவொலுக்கு, நோம்பு ஒதுக்கொள்ளல போலிய்க்குது. அதான் மூச்சுத்தினறல் மீராச டாக்டர்ட்ட காட்டி இப்ப தேவலையாம். இப்ப சஹர்தானே போன் போட்டு மாமி எப்படிகிறாகன்னு கேளு. இப்பத்தான் போன் போட்டேன். இப்ப நல்லா தூங்குறாங்களாம். பாவம் அவோலுக்கு பலகீனமாச்சு உடம்பு-ஜமால்.
அமாங்க அதனாலத்தான் ரஜிய(இப்படித்தான் சரிபா கூப்புடுவா,ரெண்டு பேரும் ஒரே வயசு தோழி) இந்த தடவ காக்கா கூட்டிட்டுப்போவலையாம்.
அப்படியா? யாரும் சொல்லல!!இவ்வளவுப் பெரிய முடிவு நடந்திருக்கு.
எனக்கே ராத்திரிதான் தெரியும்.காக்கா முடிவுயெடுத்து ராத்தமா கிட்டயும்,பெரியப்பா கிட்டயும் சொன்ன அன்னக்கித்தான் உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆகிப்போச்சே. அப்படியா நல்ல முடிவுதான்.
மச்சான் எல்லாமெ யோசிச்சித்தான் எடுப்பாங்க!
உங்க மச்சான உட்டுக்கொடுக்க மாட்டியல!
சரி நான் நோம்பு வய்கனும் .டீ ரெடியானதும் எழுப்புறேன் நீங்க போய் படுங்க!
(சொல்லிவிட்டு சரிபா அடுபடிக்கு போறா).
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.