Breaking News
recent

டாக்டர் ஹிமானா செய்யித் அவர்களின் இஸ்லாமிய இலக்கிய கொடை...!

சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையித் இபுராஹிம் அவர்கள் ஹிமானா சையித் என்ற பெயரில் உலகத்தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார்கள். 1964ல் மறுமலர்ச்சி வார இதழ் மூலம் தொடங்கிய தமது இலக்கியப் பணி இன்று பல பத்திரிக்ககைளில் கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை என்று தொடர்ந்து செல்கின்றது.
அவர்கள் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 1000 கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். பல பல்கலைக்கழகங்களில் பலர் அவரது ஆக்கங்களில் எம்.பில் பட்டங்கள் பெற்றுள்ளனர் அவர்களது ஆக்கங்களில் ருசி என்ற சிறுகதைத் தொகுப்பு கேரள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சன்முகவனம் இவர்களது நாவல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கோடுகள் கோலங்கள் என்ற நாவல் கேரள மேல்நிலைப் பள்ளி பாடநூலில் சேர்க்கப்பட்டள்ளது.
அது தவிர 'தமிழ் மாமணி, 'பாரத் ஜோதி', 'சிறந்த குடிமகன்' போன்ற விருதுகளும் பெற்றுள்ளார்கள். முஹம்மதியா பள்ளிகளின் தாளாளராக பணிபுரிந்துள்ளார்கள். மாவட்ட ஐக்கிய பொருளாதார சபையின் செயலாளராகவும், மாவட்ட ஷரிஅத் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்கள்.
இவ்வாறு சமுதாய வளர்ச்சிக்காக பாரதம் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், புருணை, இலங்கை, ஹாங்காங், தாய்லாந்து, அரபிய அமீரகம், சவுதிய அரேபியா, குவைத், போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார்கள்.சிறுகதைகள்/ஆணிவேர் தொகுப்பு
மகனின் சந்தேகம்
முன்வரிசை
மலர் நகர்த்திய மலை
நசீரின் நோன்பு
ருசி
அல்லாஹ் போதுமானவன்
அர்த்தமுள்ள பெருநாள்
பெருநாள் சட்டை
தகுதி
சிங்கப்பூர் சேலை

தொடுவானம் தொகுப்பு
தொடுவானம்
பந்தா
இறை நாட்டம்
வாழ்க்கையே விளையாட்டாய்...
மருமகள் அமைவதெல்லாம்...
பொய் முகங்கள்
வலி
உல்லாசப் பயணம்
நோன்புக் கஞ்சி
புதிய தலைமுறை
வக்ரங்கள்
வில்லன்
படித்தவள்
கோழியும் கூவும்
யதார்த்தம்
நஞ்சூட்டிகள்
தகுதி
வழிகாட்டி
அர்த்தமுள்ள பெருநாள்
ஒரு தாயின் ஹஜ் /
/நன்றி:சித்தார்கோட்டை.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.