Breaking News
recent

எது தன்னம்பிக்கை?

எது தன்னம்பிக்கை? என்ன சொல்கிறார் `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்' தமிழ் மாநில மகளிர் அணித்தலைவி பாத்திமா முசாபர்!
``ஆற்றல்தான் தன்னம்பிக்கை. ஒவ்வொருவரிடமும் ஆற்றல் உண்டு. ஆற்றல் இல்லாத மனிதனே உலகில் கிடையாது. அதனை சரியாக அடையாளம் கண்டு, செயல்படுத்தினால் அற்புதங்கள் நிகழும்.
எனது தந்தையின் மறைவிற்குப் பிறகு, சில பொறுப்புகள் என்னிடம் வந்தன. அவற்றை ஏற்றுக் கொண்டதற்கு தன்னம்பிக்கைதான் காரணம். அதற்கு எனது குடும்பத்தினர், கணவர் கொடுத்த தைரியம்தான் பின்னணி.
அறியாமையே தன்னம்பிக்கையின் முதல் எதிரி. அதனால் அல்லாஹ் தந்திருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அறியாமை இருளை அகற்ற வேண்டியது அவசியம். ஆணாதிக்கச் சமூகம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டாமல், நம்பிக்கையை வளர்த்து வெற்றி இலக்கை அடையவேண்டும். வாழ்க்கையின் தாத்பர்யமும் அதுதான்!''.
நன்றி:குமுதம்/தன்னம்பிக்கை சிறப்பிதழ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.