Breaking News
recent

போலியான விளம்பரங்களைத் தடைசெய்!

எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பூரண குணம் பெறும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்றே சொல்லவேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ள சிகிச்சை முறைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சில தனியார் வைத்தியசாலைகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதாக தமிழகத்தில் பரவலாக அடிக்கடி விளரம்பரங்கள் வெளியாகின்றன. இதனை நம்பி சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகள் ஏமாற்றமடைய நேரிடுகிறது. தனியார் வைத்தியசாலைகளில் எத்தகைய மருந்துகள் வழங்கப்படுகின்றன என்பதும், அவை அரசு தரப் பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டவையா என்ற விவரமும் நோயாளிகள் அறிந்திட வாய்ப்பில்லை. இந்நிலையில் போலியான விளம்பரங்களைத் தடைசெய்ய வேண்டுமென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய விளம்பரங்கள் வெளியாவதற்குத் தடை செய்யும் முயற்சியை மாநில அரசு தீவிரப்படுத்துமா?
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.