Breaking News
recent

ராணுவத்தில் சேர 14 முதல் 19-ந் தேதி வரை தஞ்சாவூரில் சிறப்பு முகாம்

ராணுவத்தில் சேர 14 முதல் 19-ந் தேதி வரை தஞ்சாவூரில் சிறப்பு முகாம்


பெரம்பலூர், டிச.9-

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்திட வருகிற 14 முதல் 19-ந் தேதி வரை தஞ்சாவூரில் உள்ள அண்ணை சத்தியா விளையாட்டுத்திடலில் சிறப்பு ஆள் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

14-ந் தேதி சிப்பாய் டெக்னிக்கல்/நர்சிங் உதவியாளர் பணிக்கும், 15 மற்றும் 16-ந் தேதிகளில் சிப்பாய் பொதுப்பணித்துறைக்கும், 17-ந் தேதி சிப்பாய் தொழில்நுணுக்கமறிந்தவர் பணிக்கும், டிசம்பர் 18-ந் தேதி சிப்பாய் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கும், 19-ந் தேதி உடற்கட்டு தேர்வும் நடைபெறவுள்ளது.

முகாமிற்கு செல்லும்போது, கல்விச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் 8 எண்ணிக்கை பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படங்கள் எடுத்துச்செல்லவேண்டும். இந்த முகாமில் ஆர்வமும் தகுதியும் உள்ள பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அனில் மேஷராம் தெரிவித்துள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.