Breaking News
recent

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19-ந்தேதி நடக்கிறது

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19-ந்தேதி நடக்கிறது

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஜனவரி மாதம் 19-ந் தேதி நடக்கிறது. விழாவுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். இதில் 400 பேர் பி.எச்டி. என்ற ஆராய்ச்சிக்கான பட்டம் பெறுகிறார்கள். 55 ஆயிரம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள்.

உத்தரபிரதேச கவர்னர் ராஜேஷ்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாஉரைநிகழ்த்துகிறார்.

விழாவில் சந்திரனுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்பட 2 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

பல்கலைக்கழக துணைவேந்தர்பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் அறிக்கை படிப்பார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.