Breaking News
recent

35 இஸ்லாமிய குழுக்களை தீவிரவாத குழுக்களாக இஸ்ரேல் அறிவிப்பு

35 இஸ்லாமிய குழுக்களை தீவிரவாத குழுக்களாக இஸ்ரேல் அறிவிப்பு


ஜெருசலேம், ஜன.1-

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் 35 இஸ்லாமிய குழுக்களை தீவிரவாத குழுக்களாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. அல்கொய்தா, தலீபான் அமைப்புகளின் துணைக்குழுக்களாக இந்த 35 குழுக்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தி இந்த அமைப்புகளை தீவிரவாத குழுக்களாக அறிவிக்கும்படி பரிந்துரை செய்தன. இதை ஏற்று அந்த நாட்டு அரசு இந்த அறிவிப்பை செய்து உள்ளது. தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி செய்வதற்கு எதிராக நடத்தப்படும் சர்வதேச போராட்டத்தில், இந்த அறிவிப்பு முக்கியமான நடவடிக்கை ஆகும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஊழியர்கள் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகளான `எய்டு ஆர்கனைசேஷன் ஆப் உலேமா', `அல் அக்தர் டிரஸ்ட் இண்டர்நேஷனல்', `அல் ஹர்மைன் பவுண்டேஷன் ஆப் பாகிஸதான்', `அல் மஜீத் அல்அக்சா', `அல் ரஷீத் பவுண்டேஷன்' ஆகியவையும் அடங்கும். இவற்றில் அல் அக்தர் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் நிருபர் டேனியல் பேர்ல் கொலையுடன் தொடர்பு உடையதாகும்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.