விருது பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு
கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
பனைக்குளம்,டிச.14-
ஜனாதிபதியிடம் விருது பெற்று ஊர் திரும்பிய மண்டபம் ïனியனை சேர்ந்த ஊராட்சி தலை வர்களை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற் றனர்.
விருது
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2007-08-ம் ஆண்டுக்கான முழு சுகாதார திட்டத்தின் கீழ் நிர்மல் புரோஸ்கார் விருது பெற ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றி யம் பனைக்குளம், வெள்ளரி ஓடை, ரெட்டைïரணி, பிரப் பன் வலசை, மரைக்காயர் பட்டினம் மற்றும் ராமநாத புரம் ஒன்றியம் ஆத்திïத்து ஊராட்சி ஆகிய ஊராட்சி கள் தேர்வு செய்யப்பட் டன.
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அந் தந்த ஊராட்சி தலைவர் கள் கடந்த 5-ந்தேதி ராமநா தபுரம் மாவட்டத்தில் இருந்து புனே வுக்கு சென்றனர். பின் னர் அங்கு நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலி டம் ஊராட்சி தலைவர்கள் பனைக்குளம் சாலாமுல் அன்சர், பிரப்பன் வலசை ராஜா முகமது, வெள்ளரி ஓடை நரசிம்மன் துரை, ரெட்டைïரணி கணேசன், மரைக்காயர் பட்டினம் அப் துல் நாசர், அத்திïத்து உம் முல் பைலூனா ஆகியோர் நிர்மல் புரோஸ்கார் விருது பெற்றனர்.
வாழ்த்து
விருதுபெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஊர் திரும்பினர். அவர்களை அந் தந்த ஊராட்சி துணை தலை வர்கள், உதவியாளர்கள் மற் றும் கிராம பொதுமக்கள் மேள தாளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்று ஊர்வ லமாக அழைத்து சென்று பாராட்டுகளையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்