பெரியபட்டணத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கீழக்கரை, டிச. 30: ராமநாதபுரம் அருகேயுள்ள பெரியபட்டணத்தில் செவ்வாய்க்கிழமை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி மைக்ரோபயாலஜி துறையின் பேராசிரியர் அப்துல் சத்தார் கருத்தரங்குக்குத் தலைமை வகித்தார். ராமநாதபுரம் கள விளம்பரத் துறை அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். மேலாண்மைத்துறை தலைவர் நாசர் வரவேற்றார்.
திருச்சி கள விளம்பரத்துறை அலுவலர் எம். தசநாதன் கூறுகையில் இந்நோய் 15 வயது முதல் 35 வயதினருக்குத் தான் ஹெச்.ஐ.வி. காணப்படுகிறது என்றார்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முகம்மது இப்ராஹிம் நன்றி கூறினார். கருத்தரங்கில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
AdiraiPost
எய்ட்ஸ்
கருத்தரங்கம்
பெரியபட்டணம்
விழிப்புணர்வு
பெரியபட்டணத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்