Breaking News
recent

புத்தகம் வாசிப்பால் மாணவர்களுக்கு அறிவு வளரும்

கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் பள்ளியில் நேற்று தஞ்சை மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற மெட்ரிக் பள்ளி இயக்குனர் மணி பேசியதாவது:

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் குடிநீர், கழிவறை, காற்றோட்டமான வகுப்பறைகள் அவசியம் இருத்தல் வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்களை நம்பி தான் வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் தான். மாணவர்களை 100 சதவீத மதிப்பெண் பெறும் வகையில் தேர்ச்சி இலக்கை வைத்து அவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்.


வெறும் பாடத்தில் மட்டும் மாணவர்களை கவனம் செலுத்தவிடாமல் பொதுஅறிவு உள்ளிட்ட புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் புத்தக பூங்கொத்து திட்டத்தை அரசு அமல்படுத்தி வருவதை பள்ளிகள் பயன்படுத்தி கொண்டு மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேசும் திறனை வெளிப்படுத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் பேசுகையில்,

""இந்த கல்வியாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் மாநில அளவில் நம் மாவட்டம் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார். முன்னதாக மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வர் சாரதா வரவேற்றார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அல்அமீன் பள்ளி தாளாளர் கமாலுதீன், முதல்வர் சையதுஅப்துல்சுபஹான் ஆகியோர் செய்திருந்தனர்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.