Breaking News
recent

குவைத் தமுமுக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

குவைத் தமுமுக வின் சார்பாக டிசம்பர் 6 & பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 12, வெள்ளி அன்று மாலை 7.00- 11.00 மணி அளவில் பேராசிரியர் தாஜுத்தீன் அவர்கள் தலைமையில் இனிதே நடை பெற்றது. புரவலர் எஸ்.கே.எஸ் முன்னிலையில், தமிழர் சமூக நீதிப் பேரவை, பெரியார் நூலகம், விடுதலை சிறுத்தைகள், வள நாடன் அறக் கட்டளை, தமிழோசை, குவைத் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.என்.பி ஆகிய அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். திரு.மதி அவர்கள் பேசுகையில் இந்தியாவிற்கு ஒரு முஸ்லிம் பிரதம மந்திரியாக வருவதற்கு நாமெல்லாம் பாடு பட வேண்டும் என்றார். டாக்டர் அன்வர் பாஷா (IUML) அவர்கள் தம் தலைமையின் அனுமதியுடன் தாம் அங்கு வந்திருப்பதாகக் கூறி, பயங்கர வாதத்திற்கு எதிராக நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்றார். எஸ்.கே.எஸ் அவர்கள் சங் பரிவார கும்பலுக்கும், யூத பிரிவினைவாத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை நேர்மையான சில ஊடக ரிப்போர்ட்களை ஆதாரமாக காண்பித்து, பேசியது அனைவரது சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைந்திருந்தது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (Islamic Guidance Centre – Kuwait) இரு கிளைகளிலிருந்தும் மெளலவிகள், அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி, நஸீர் அஹமது ஜமாலி அவர்கள் பேசுகையில், தமுமுக வின் புதிய அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) வெற்றிக்காக அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்கள்.

கூட்டத்தின் முடிவில் வள நாடன் அறக்கட்டளையின் நிறுவனர் இத்தீர்மானங்களை முன் மொழிந்தார்.

1) உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு தமுமுகவின் சார்பில் ஈகைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2) இஸ்லாமிய வழிபாட்டு இடமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்கிய பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு உறுதுணையாக நின்ற அரசியல் அமைப்புகள், மத வெறியர்கள் உள்ளிட்டோரை வன்மையாக கண்டிப்பதோடு, இவ்வழக்கு விசாரணயை உடனடியாக முடித்து, இவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனையை வழங்கக் கோருகிறோம்.

3) இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளையும், வழிபாட்டு உரிமையையும் பெற்ற பாப்ரி மஸ்ஜிதை உடனடியாக கட்டித் தருவதோடு, எங்கள் உரிமையை உறுதி செய்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட வேண்டும் என இந்திய அரசாங்கத்தையும், இந்திய உச்ச நீதி மன்றம் உள்ளிட்ட சட்ட அமைப்புகளையும் இத்தீர்மானம் கேட்டுக் கொள்கிறது.

shanawas_a@yahoo.com.sg
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.