Breaking News
recent

பாஸ்போர்ட் விண்ணப்பம் குறிப்பிட்ட நாளில் வரவும் வதந்தியை நம்பாதீர் _ அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் விண்ணப்பம் குறிப்பிட்ட நாளில் வரவும் வதந்தியை நம்பாதீர் _ அதிகாரி தகவல்

மதுரை,ஜன,1_

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் பொது குறிப்பிட்ட நாளில் வரவும் என பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.

இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சந்தாராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இணைய தளத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும் பொழுது அதில் குறிப்பிடப்படும் நாளிலோ, அதற்குப் பின் ஐந்து நாட்களுக்குள்ளோ விண்ணப்பதாரர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகத்தரும் விண்ணப்பம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது.

இது இன்று (1_ம் தேதி) முதல் தீவிரமாக செயல்படுத்தப்படவுள்ளது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் விதிகளின்படி செயல்பட்டு ஒத்துழைக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லையென்றும் வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாமென்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.