Breaking News
recent

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் நிவாரண உதவி

ராமநாதபுரம், டிச. 13: ராமேசுவரத்தில் முனியசாமி கோயில் தெரு, சந்தன மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு, துபையைச் சேர்ந்த இ.டி.ஏ. அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுதீன் அவர்களது உத்தரவின்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அக்பர் கான், மேலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ரூ.600 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன.

கீழக்கரை வெல்பேர் அசோசியேஷன் தலைவர் லியாகத் அலி, கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.