Breaking News
recent

ரயில் டிக்கெட்டுகளுக்கு இனிமேல் ஆன்லைனில் 50 சதவீதம் முன்பதிவு

ரயில் டிக்கெட்டுகளுக்கு இனிமேல் ஆன்லைனில் 50 சதவீதம் முன்பதிவு



சென்னை, ஜன.9: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஊனமுற்றோர், முதியோருக்காக பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த வாகனத்தில் 4 பேர் இலவசமாக பயணம் செய்யலாம். ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள அலுவலகம் அல்லது 99403 56789 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரை வரவழைக்கலாம்.

‘பண்டிகை காலங்களில் ரயில்களில் செல்ல, பல மணி நேரம் முன்பதிவு கவுன்டர்களில் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை’ என்று பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கலாமா? என்று ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வேலு கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.