Breaking News
recent

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை

கோழிக்கோடு, ஜன. 15: கேரளத்தில் ஒரு வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கோழிக்கோடில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பாபு மாத்யூ பி.ஜோசப் வியாழக்கிழமை இந்த உத்தரவை வழங்கினார்.

கடந்த 2003-ம் ஆண்டு மராத் என்ற பகுதியில் கடற்கரை பகுதி அருகே நடந்த கலவரத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 139 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் உரிய சாட்சியங்கள் இல்லாததால் 76 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 63 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இதில் 62 பேருக்கு கடும் ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.