Breaking News
recent

பாலஸ்தீனியர்கள் சாவு எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது

பாலஸ்தீனியர்கள் சாவு எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது


காசா, ஜன.9-

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு நாள் தாக்குதல் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட 2 வார காலம் நடந்த தாக்குதலில் நேற்று முன்தினம் தான் பாலஸ்தீனியர்கள் பொருள்களை வாங்குவதற்காக ஒரு நாள் மட்டும் தாக்குதலை நிறுத்தி வைத்தது. நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. மிக உக்கிரமாக தாக்குதல் நடந்தது. 3 சிறுவர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது.

13 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் தரப்பில் 10 பேர் பலியானார்கள். அவர்களில் 7 பேர் ராணுவத்தினர் ஆவார்கள்.

போரை நிறுத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. அங்கு நடந்த விவாதத்தில் அரபு நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அமெரிக்கா எகிப்து நாட்டின் சமரசத்திட்டத்தின் மூலம் போர்நிறுத்தம் காணமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.