லாலு கட்சி எம்.பி. சகாபுதீனுக்கு ஜாமீன் மறுப்பு
பாட்னா, ஜன.7: ஆயுதக் கடத்தல் வழக்கில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி எம்.பி.யான முகமது சகாபுதீனின் ஜாமீன் மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2005-ம் ஆண்டு ஏப்ரலில் சகாபுதீனின் வீட்டில் துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிவான் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்