Breaking News
recent

ஒபாமா பதவிப் பிரமாண வாக்கியம்: தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு

ஒபாமா பதவிப் பிரமாண வாக்கியம்: தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு

வாஷிங்டன், ஜன.16: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவிப் பிரமாணம் ஏற்கும்போது, "அதனால், எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே' என்ற வாக்கியத்தைப் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பதவிப் பிரமாணம் ஏற்கும்போது மேற்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தப் போவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் பராக் ஒபாமா ஏற்கெனவே கூறியுள்ளார்.

அதேபோல, ஒபாமா தேர்வு செய்துள்ள அமைச்சர்களான பாதிரியார்கள் ஜோசப் லோவெரி, ரிக் வாரென் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரார்த்தனை நடத்த உள்ளனர்.

கடவுள் தொடர்பான வாக்கியத்தை ஒபாமா பயன்படுத்தவும், பாதிரியார்கள் பிரார்த்தனை செய்வதையும் தடை செய்யக் கோரி இறைமறுப்பாளர் குழு ஒன்று வாஷிங்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இரு கோரிக்கைகளுக்குமே தடை விதிக்க முடியாது என வழக்கை விசாரித்த நீதிபதி ரெக்கி வால்டன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.