Breaking News
recent

பத்து மீட்புச் சங்கத்துக்கு நிதி உதவி

பத்து மீட்புச் சங்கத்துக்கு நிதி உதவி

ராமநாதபுரம், ஜன. 20: ராமநாதபுரம் விபத்து மீட்புச் சங்கத்தின் வளர்ச்சிக்காக சாத்தான்குளத்தைச் சேர்ந்த அஹமது மைதீன் செவ்வாய்க்கிழமை ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

விபத்தில் காயம் அடைந்தோரை காப்பாற்றி அவர்களுக்கு தேவையான உதவிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்து மீட்புச் சங்கம் செய்து வருகிறது.

இறந்தவர்களைப் பாதுகாப்புடன் பதப்படுத்தி வைக்க உதவும் குளிர் சாதனப் பெட்டியை வாங்கி ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கிட உதவும் குளிர் சாதனப் பெட்டி வாங்குவதாக சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த மலேசியத் தொழிலதிபரும் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவருமான அஹமது மைதீன் விபத்து மீட்புச் சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இத் தொகையை விபத்து மீட்புச் சங்க மாவட்டத் தலைவர் எஸ். சண்முகசுந்தரம், செயலர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.