Breaking News
recent

சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம்

சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம்

பெங்களூர், ஜன.7: சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்து அதன் தலைவர் பி.ராமலிங்க ராஜு வெளியிட்ட அறிக்கையையடுத்து, பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தின் 6 ஆயிரம் ஊழியர்களிடையே புதன்கிழமை பெருத்த பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

தங்கள் பணியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு இந்த நிறுவனத்தைச் சார்ந்த சாப்ட்வேர் ஊழியர்களிடையே புதன்கிழமை முற்பகலில் ஏற்பட்டது.

அவர்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு இருந்ததாக ஓர் ஊழியர் எமது நிருபரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அடுத்து என்ன நடக்குமோ தெரியவில்லையே என்ற எண்ணத்தில் பலர் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ராம், தமது நிறுவன ஊழியர்களுக்கு ஓர் அவரச மெயிலை அனுப்பியிருக்கிறார். சத்யம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் நீங்கி இயல்புநிலை திரும்பிவிடும். எனவே ஊழியர்கள் இது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்று அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்கள் எந்தக் கவலையுமின்றி தங்களுடைய வாடிக்கையாளர்களின் சேவையில் முழுக் கவனத்துடன் ஈடுபடவேண்டும். அதற்கேற்ப முன்பைவிட சிறப்பாகவும் திறமையாகவும் பணியாற்றவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கலான இந்தத் தருணத்தில் ஒற்றுமையாகச் செயல்பட்டு நமது நிறுவனத்தை மீண்டும் ஆற்றல்மிக்கதாக்கிக் காட்டுவோம். ஒன்றுபடுவோம்; வெற்றிபெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.