Breaking News
recent

மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார்

மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார்


மதுரை, ஜன. 9: மதுரையில் உள்ள வங்கிகளுக்கு வரும் கூடுதல் தொகை மாதம் தோறும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு நகரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் இருந்து அனுப்பப்பட்ட தொகையில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் கள்ள நோட்டுகள் இருப்பது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை வங்கிகள் அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதாக மீண்டும் ரிசர்வ் வங்கி புகார் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அனுப்பி வைத்த பணத்தில் ரூ.11ஆயிரத்து 950க்கு ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.ஆயிரம் என கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பிசாய் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.