Breaking News
recent

மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை: ஆட்சியர்

மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை: ஆட்சியர்


கோவை, ஜன. 4: மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தி:

கோவை நகரில் இயங்கி வரும் சில மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரவு நேரங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெற்றோர்களுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.

எனவே, பள்ளிகளில் விண்ணப்பங்களை வழங்கும் தேதியை முன்கூட்டியே அறிவித்து பள்ளி வளாகத்துக்குள் பகல் நேரத்தில் பாதுகாப்பாக வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை பெற இரவு நேரங்களில் பள்ளிகள் முன்பு கூடுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.