காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஜி.எம். ஷா மறைவு
ஸ்ரீநகர், ஜன.6: அவாமி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குல் முகம்மது ஷா (88), செவ்வாய்க்கிழமை காலமானார்.
கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷா, செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்ததாக, அவரது மகன் முஸôஃபர் அகமது ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரபலமிக்க அரசியல் தலைவர்களில் ஜி.எம். ஷாவும் ஒருவர். சட்டப்படிப்பை முடித்த ஷா, 1944-ம் ஆண்டு அவரது மாமனார் ஷேக் முகம்மது அப்துல்லாவின் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்ததன் மூலம் அரசியலில் தடம் பதித்தார்.
1984-ல் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ஷா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநில முதல்வரானார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்