Breaking News
recent

பாளை.யில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்

பாளை.யில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜன. 1: இஸ்ரேலை கண்டித்து பாளையங்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தினசரி சந்தை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனித நீதி பாசறை மாவட்டச் செயலாளர் அன்வர் தலைமை வகித்தார். ஏர்வாடி நகரத் தலைவர் முகைதீன் அப்துல்காதர் முன்னிலை வகித்தார்.

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.