ஆம்பூரில் போலீசார் சமரசத்தால் காதல் ஜோடி திருமணம்
ஆம்பூர், ஜன.10-
ஆம்பூரில், போலீசார் சமரசம் செய்து வைத்ததால், காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
காதலில் கர்ப்பம்
ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னரசன். அவரது மகள் ஷீபா (வயது 19). அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஷீபாவும், அங்கே வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22) என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் நெருங்கி பழகியதன் விளைவாக, ஷீபா கர்ப்பம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் சதீஷ்சிடம் வற்புறுத்தினார். அதன்காரணமாக ஷீபாவிடம் பேசுவதை சதீஷ் நிறுத்திக்கொண்டார்.
போலீஸ் தலையீட்டில் திருமணம்
அதனால் அதிர்ச்சி அடைந்த ஷீபா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணியம்மாள், சதீஷை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து வைத்தார். அதன்பயனாக, ஷீபாவை திருமணம் செய்து கொள்ள சதீஷ் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு கோவிலில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்