Breaking News
recent

ரயில்வே இடைக்கால பட்ஜெட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு

சென்னை, பிப். 14:
மத்திய அரசு ரயில்வே இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், அவருக்கு துணையாகவும், நல்லாதரவு கொடுத்து வரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ரயில்வே பட்ஜெட் என்றாலே கட்டண உயர்வுதான் நினைவிற்கு வரும், ஆனால் ஐந்து வருடங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கட்டணத்தை உயர்த்தாமல், ரயில் கட்டணத்தை குறைத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துள்ள லல்லு பிரசாத் யாதவ் அவர்களை மீண்டும் பாராட்டுகிறேன். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள லாலுவும்-வேலுவும் ரயில்வேயின் வளர்ச்சிக்கு உறுதி என்று மீண்டும் நிரூபித்து உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு மேலும் 5 புதிய ரயில்களும், தமிழக முதல்வர் கலைஞர் கொண்டு வரவுள்ள மெட்ரோ ரயிலுக்கு அனுமதியும், அதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற தமிழகத்திற்கு பலவேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் வழிகாட்டுதலிலும், டாக்டர் கலைஞர் அவர் களின் நல்லாதரவுடன் நடை பெற்றுவரும் மத்திய அரசு மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.

எனவே, இந்திய திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களை மேலும் மெருகேற்றிட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் தலைமையிலான வலுவான கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் ஹக்கீம் சைய்யது சத்தார் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.