மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கமம் விழாவில் நரேந்திரமோடி பங்கேற்பு
மதுரை, பிப்.15-
மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கம விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
நரேந்திர மோடி
மதுரை கே.எல்.என். என்ஜினீயரிங் கல்லூரியின் செயலாளர் சிவநாத், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க செயலாளர் பிரபாகரன், சவுராஷ்டிர மொழி ஆய்வு மைய பொறுப்பாளர் பரசுராம் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
சவுராஷ்டிர பாரம்பரியம் மற்றும் மொழி ஆய்வு மையம், சவுராஷ்டிர தொழில் வர்த்தக சங்கம், கே.எல்.என்.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அனைத்து சவுராஷ்டிர அமைப்புகளும் இணைந்து சவுராஷ்டிர சமூக சங்கமம் விழாவை நடத்த உள்ளோம். சிவகங்கை மாவட்டம் பொட்டபாளையத்தில் உள்ள கே.எல்.என்.என்ஜினீயரிங் கல்லூரியில் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லை. தென் இந்தியாவில் வாழும் சவுராஷ்டிர மக்களை சந்தித்து அவர்களது கல்வி, தொழில், கலாச்சாரம், பண்பாடு குறித்து அறிந்து கொள்வதற்காகவே அவர் வருகிறார்.
சிலை திறப்பு
பல இடங்களில் வாழும் எங்கள் மக்களில் பலர் சவுராஷ்டிர மொழியே தெரியாமல் உள்ளார்கள். காலம் அவர்களை அப்படி மாற்றி விட்டது. குஜராத் முதல்வருடன் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிர பல்கலைக்கழக துணை வேந்தர் கமலேஷ் ஜோஷிபுரா மற்றும் கமல்நாத் திரிவேதி ஆகியோரும் வருகிறார்கள்.
எங்கள் மக்களின் மொழி, கலாச்சாரம், இடம் பெயர்தல் குறித்த ஆராய்ச்சி மையத்துக்கான ஒரு அமைப்பை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்த அறிவிப்பை நரேந்திரமோடி வெளியிடுவார். கல்லூரி வளாகத்தில் அதன் நிறுவனர் கே.எல்.என்.கிருஷ்ணனின் சிலையை அவர் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தென் இந்தியாவில் வாழும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சவுராஷ்டிர மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
AdiraiPost
நரேந்திரமோடி
மதுரை
மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கமம் விழாவில் நரேந்திரமோடி பங்கேற்பு
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்