கரூர் தோகைமலை ஒன்றியம் தேவர்மலையில் உள்ள கதிர் நரசிங்கப்பெருமாள்கோயில் புனரமைப்புப் பணி கடந்த எட்டு மாதங்களாக இந்து அறநிலையத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு புனரமைப்புப் பணியில் அரபு நாணயம், தங்கத் தாலி, வெள்ளிதாயத்துபுதையல் கண்டெடுக்கப் பட்டது.
கோயில் மண்டபத்தின் உள்ளே இருந்த மேடை ஒன்றை தோண்டும்போது நான்கு அடி ஆழத்தில் மண் பானை ஒன்று கிடைத்தது. கோயில் செயல் அலுவலரிடம் தகவல் அளிக்கப்பட்டதில், தாசில்தார் முன்னிலையில் திறந்து பார்த்தபோது, 100 வெள்ளிக் காசுகள், ஒரு வெள்ளி தாயத்து மற்றும் தங்கத்தாலான பொட்டு, தாலி என்று இருந்தது.
வெள்ளிக் காசுகளில் அரபு எழுத்துக்களும், தாலி மற்றும் தாயத்துகள் முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் வடிவத்திலும் இருந்தன. இப்பொருள்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பளிக்கப்பட்டன. தொல்பொருள் ஆய்வாளர் மூலம் நாணயங்களின் காலம், எடை மற்றும் வரலாறு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேசுவரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்