இணையதள மோசடி மூலம் வங்கிகளில் பணம் எடுப்பதில் தமிழகம் முதலிடம் : இணையதளம் வாயிலாக வங்கிகளில் பணப்பட்டுவாடா செய்வதிலும், பணம் பெறுவதிலும் பல மோசடிகள் உள்ளன. இவற்றில் முதலிடம் வகிப்பது தமிகம்தான், இரண்டாவது இடம் மாகாரஷ்ட்ரா மாநிலம். இந்தியாவின் பீகார், ஜார்கண்ட், கோவா மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த மோசடி நடந்துள்ளது.
இதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகமான வழக்குகள் பதிவான் மாநிலம் ஆந்திரப்பிரதேசம் ஆகும். இரண்டாவது புது டெல்லி. தமிழகத்திற்கு மூன்றாவது இடம். மோசடியில் தமிழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாததற்கு காரணம் தெரியவில்லை. இந்த மோசடி மூலம் வங்கிகளிலிருந்து சுமார் 2.25 கோடி பெறப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி பெறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஷகில் அகமது மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணம் பட்டுவாடா, சேமிப்பு, பணம் எடுப்பது போன்றவை சமீப காலமாகக் குறைந்து வருகிறது, மாறாக இணையத்தின் வாயிலாகச்செய்வதால் நேரம், அலைச்சல் மிச்சம். குறிப்பாக அதிக அளவில் முதலீடு மற்றும் பணம் எடுப்பது பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்த இணைய மோசடியால் இணையத்தின் வாயிலாக வங்கி காரியங்களை செய்பவர்களிடையே அச்சம் ஏற்படத்தான் செய்கிறது
நன்றி:அதிகாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்