Breaking News
recent

தொண்டியில் பள்ளி ஆண்டு விழா

தொண்டியில் பள்ளி ஆண்டு விழா


திருவாடானை, பிப். 2: திருவாடானை அருகே தொண்டியில் இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் பள்ளியில் மேல்நிலைப்பள்ளி 12-வது ஆண்டுவிழா நடைபெற்றது.

விழாவில் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கலந்து கொண்டு பேசியது:

தொண்டியில் ஆரம்பிக்கப்பட்ட கடலியல் கல்லூரி அழகப்பசெட்டியாரின் கணவு நனவாகும் வகையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் வழங்கி தொண்டி மக்கள், ஜமாத்தார்களின் சொந்த பணத்தை செலவு செய்து இக்கல்லூரியின் கட்டடத்தை கட்டி முடித்து இந்த கல்லூரியை அமைத்தோம்.

தற்போது இந்த கல்வி ஆண்டு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கபடவில்லை என்று கூறினார்கள். அத்துடன் இக்கல்லூரியை காரைக்குடிக்கு மாற்றுவதாக தெரிவித்தனர்.

யாரோ இரண்டு ஆசிரியர்களுக்காக கல்லூரியை மாற்றக் கூடாது அப்படி மாற்றுவதாக இருந்தால் நானே மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவேன் என்றார்.

விழாவில் தமிழ் நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் க. முண்டையன், பள்ளி தலைவர் புபக்கர், சதக்கத்துல்லா சாகிபு, முதல்வர் செல்லையன், கிறுஸ்துவதாஸ், சௌந்திரபாண்டியன், செய்யது கமாலுதீன் செயலர், பந்தேநவாஸ் ஜமாத் தலைவர், மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்ரனர்.

பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.