கடையநல்லூர், பிப்.16-
முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், தொழிலபதிபர் பத்ஹ{ர் ரப்பானி, எம்.ஏ.எஸ். அபுபக்கர்,தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் எஸ். கோதர் மொகிதீன், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் துராப்ஷா, செய லாளர்கள் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், செய்யது முஹம்மது, மாவட்ட துணைத் தலைவர் செய்யது பட்டாணி, செய்யது இப்ராஹீம், வி.எஸ். அமானுல்லாஹ், நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஏம். இப்ராஹீம், இ. முஹம்மது காஸிம், தென்காசி கமால் முஹம்மது, டி.எஸ்.எம். ஹயாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ஏ. மஜீத் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர்கள், பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரா சாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரங்கல்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-தமிழ்நாடு மாநில முன்னாள் அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம்.ஏ. மஜீத் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். சுதந்திரப் போராட்ட தியாகியான அவர் 1962 தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்தபோது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியவர். 1963 ல் காமராசர் பதவி விலகலை தொடர்ந்து எம். பக்தவச்சலம் முதல் வராக பொறுப்பேற்ற போதும் அதே உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியிலிருந்து தமிழகத் தின் வளர்ச்சிக்கும் குறிப்பாக குடிநீர் திட்டங்களுக்கும் பெரும் துணைபுரிந்தவர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கருப்பா நதி அணை உள்ளிட்ட பல்வேறு நல்ல பணிகள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவர் எஸ்.எம்.ஏ.மஜீத். இந்த காலகட்டங்களில்தான் முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராக இருந்து பணியாற்றினார்.அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து பணியாற்றிய எஸ்.எம். ஏ. மஜீத் அவர்கள் மறைவிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில், எஸ்.எம்.ஏ. மஜீத் தமிழகத்தின் கல்வி வளர்ச் சிக்காகவும் பாடுபட்டவர். குறிப்பாக தென் மாவட்டங்களில் கல்விக்கூடங்கள் அமைய பெருமுயற்சி எடுத்தவர். அப்பழுக்கற்றவர். அவரது மறைவு சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது மறுஉலக வாழ்விற்கு எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
AdiraiPost
மணிச்சுடர்
லால்பேட்டை இணையதளம்
முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.எம்.ஏ.மஜீத் மறைவிற்கு முதல்வர் கலைஞர்- பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
லால்பேட்டை . காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்