அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்தும் புனித மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் அகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் பிறந்த தின விழாவினையொட்டி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 13.03.2009 வெள்ளிக்கிழமை ஹிஜிரி 1430 ரபிவுல் அவ்வல் பிறை 17 மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அபுதாபி நஜ்தா சாலையில் உள்ள ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மவ்லவி எஸ்.ஆர். கௌஸ் முஹைதீன் மன்பயீ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் இந்நிகழ்விற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை புரிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற முஹைதீன் அப்துல் காதர் அவர்களை 050 444 1861 எனும் அலைபேசியிலோ அல்லது mabdulcader@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
AdiraiPost
அபுதாபி
இந்திய முஸ்லிம் பேரவை
நிகழ்ச்சி
மீலாதுந் நபி
விழா
அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்தும் புனித மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்