Breaking News
recent

பரமக்குடி - முஸ்லிம் கல்வி மையத்தின் இலவசப் பயிற்சி நிறைவு விழா

முஸ்லிம் கல்வி மையத்தின் இலவசப் பயிற்சி நிறைவு விழா

பரமக்குடி, மார்ச் 18: ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் கல்வி பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற இலவசப் பயிற்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு பொதுத் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சி கடந்த மூன்று மாதங்களாக கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மத வேறுபாடின்றி இந்து, கிறிஸ்தவ மதத்தினருக்கும் இப் பயிற்சி வழங்கப்பட்டது.

இதுபோன்று முஸ்லீம் கல்விப் பயிற்சி மையம் சார்பில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது.

இங்கு நடைபெற்ற நிறைவு விழாவுக்கு மாவட்ட பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆலம் தலைமை வகித்தார். இஸ்லாமிய இலக்கிய கழகப் பொதுச் செயலர் எஸ்.எம். இதயத்துல்லா முன்னிலை வகித்தார்.

பயிற்சி மைய ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா வரவேற்றார். இதில் பயிற்சி மைய பொறுப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் ஜெ. ஹிதாயத்துல்லா நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.