Breaking News
recent

தேர்தல் விதி மீறும் பாஜக: காங். எம்எல்ஏ கண்டனம்

தேர்தல் விதி மீறும் பாஜக: காங். எம்எல்ஏ கண்டனம்

நாகர்கோவில், மார்ச் 10: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி பாஜக சுவர் விளம்பரங்களை செய்துள்ளதற்கு குளச்சல் காங். எம்எல்ஏ எஸ். ஜெயபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியார் சுவர்களில் தேர்தல் சின்னம், வேட்பாளர்கள் பெயர்களை எழுதக் கூடாது. தட்டிபோர்டு, விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது.

ஆனால் பாஜக மற்றும் சில கட்சியினர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகர்கோவில், பார்வதிபுரம், ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், அம்மாண்டிவிளை, திங்கள்நகர் போன்ற பகுதிகளில் வேட்பாளர் பெயர், சின்னங்களை வரைந்துள்ளனர்.

தனியாருக்குச் சொந்தமான சுவர்களிலும் அனுமதி பெற்று விளம்பரம் செய்யக் கூடாது என்ற தமிழக தேர்தல் ஆணையத்தின் விதியை மீறியும் விளம்பரம் செய்வது தேர்தல் நடத்தை விதிமீறல். இதனால் அக் கட்சி தேர்தல் ஆதாயம் பெற்றிருக்கிறது. இது சட்டவிரோதமானதும், மக்களை திசைதிருப்பும் செயலுமாகும்.

எனவே, பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.