Breaking News
recent

காயல்பட்டினத்தில் நபிகள் பிறந்த தின விழா

காயல்பட்டினத்தில் நபிகள் பிறந்த தின விழா

ஆறுமுகனேரி, மார்ச் 18: காயல்பட்டினம் புதுப்பள்ளியைச் சேர்ந்த மேலப் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்த தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மேலப்பள்ளி இமாம் முகமதுகான் அஸ்ரத் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மொஹைதீன் அப்துல் காதர், புதுப்பள்ளி ஜமா அத் துணைத் தலைவர் எம்.எஸ்.எம். புகாரி மற்றும் செயலர் எஸ்.ஏ. முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மொலிது மஜ்லீஸ் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.