Breaking News
recent

பள்ளிவாசல் நிர்வாகி மீது தாக்குதல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது

பள்ளிவாசல் நிர்வாகி மீது தாக்குதல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது

திருநெல்வேலி, மார்ச் 10: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கியதாக, கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலப்பாளையம் காட்டு புதுத்தெருவில் உள்ளது காட்டு ஜூம்மா பள்ளிவாசல்.

இந்த பள்ளிவாசலில் திங்கள்கிழமை இரவு மிலாது நபி பண்டிகையையொட்டி, சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த சப்பாணிஆலிம் தெருவைச் சேர்ந்த பைசல் (23), இவர் நண்பர் ஆட்டோ டிரைவர் ஆஷிக் ரகுமான் (24) ஆகிய இருவரும் தகராறு செய்தனராம்.

இத் தகராறில் பள்ளிவாசலின் நிர்வாகி அசனை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அசன் புகார் அளித்தார்.

போலீஸôர் வழக்குப் பதிந்து, பைசல், ஆஷிக் ரகுமானை கைது செய்தனர். பைசல் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.