Breaking News
recent

எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதி நாள் விழா

எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதி நாள் விழா

திருச்சி, மார்ச் 8: திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரியில் "ஹாஸ்டோ பெஸ்ட் 09' என்ற விடுதி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனப் பொதுச் செயலரும், தாளாளருமான ஏ. முகம்மது யூனுஸ் தலைமை வகித்துப் பேசுகையில், "கல்லூரி வாழ்க்கை கல்வியறிவைத் தரும். விடுதி வாழ்க்கை பட்டறிவை அளிக்கும். இரண்டுமே வாழ்க்கையில் இன்றியமையாதவை' என்றார்.

உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர் பி. முருகன் சிறப்புரையாற்றினார்.

பின்னர், பேராசிரியர்கள் பலர் பேசினர்.

விடுதி ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் அமீது, துணைக் காப்பாளர் செந்தில்குமார், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருஞானசம்பந்தம் வரவேற்றார். விடுதி மாணவர் மு. முகமது நிஃமத்துல்லா நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.