Breaking News
recent

தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்: மயில்சாமி அண்ணாதுரை

தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்: மயில்சாமி அண்ணாதுரை

கோபி, மார்ச் 14: தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம் கிடைக்கிறது. இதனால் சாதிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது என்று சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், இந்தியா 2020-க்கு முன்பே வல்லரசாக மாறும்.

நாளைய இந்தியா நிச்சயமாக உலக நாடுகளுக்கெல்லாம் தலைவனாக உயரப்போகிறது. அதற்கு அடையாளம்தான் தற்போது நிலவில் உலா வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம்.

1960 மற்றும் 70-களில் நிலவில் ஆராய்ச்சி நடத்தியிருந்தாலும், தற்போது இந்தியா தன் விண்கலத்தின் மூலம் ஆராயும் இடம் இதுவரை யாரும் கால் பதிக்காத இடம். தற்போது இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் அந்த இடத்திற்கு படையெடுத்துள்ளது என்றார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.