முஸ்லிம் பொதுஜன சங்கம் சார்பில் அழகன்குளத்தில் மீலாது விழா
பனைக்குளம்,மார்ச்.15-
அழகன்குளத்தில் மீலாது விழா முஸ்லிம்பொதுஜன சங்கம் சார்பில் நடந்தது.
மீலாதுவிழா
மண்படம் ஒன்றியம் அழகன் குளம் கிராமத்தில் முஸ்லிம் பொதுஜன சங்கத்தின் சார்பில் நபிகள் நாயகத்தின் பிறந்த தினவிழாவான மீலாது விழா நடந்தது. முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் அபுசாலிகு தலைமை தாங் கினார். முன்னதாக அஸ்ரபுல் உலூம் ஹிப்ளு மதரசாமாண வர்கள் கிராத் ஓதினர்.இதைத்தொடர்ந்து முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபைசெய லாளர் முகம்மது நிஜாம் வரவேற்றுபேசினார்.
இதில் வேலூர் பக்கியாத்துஸ்ஸாலி ஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் அப்துல் ஹமீது பாக்கவி ஹஜரத்கலந்து கொண்டு பேசினார்.இதில் அழகன்குளம் பேஷ் இமாம் செய்யது பகுர்தீன் ஆலிம் கலந்துகொண்டார்.முன்ன தாக தீன் கொடியை ஜமாத் பொருளாளர் பாரூக் ஏற்றினார்.
பரிசு
விழாவில் நடந்தபோட் டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விழாக்குழு பொருளாளர் முகம்மதுகனி, சங்க செயலாளர் அப்துல் ரசீதுகான் ஆகியோர் வழங்கினர்.ஊராட்சி மன்ற தலைவர் அசோகன், இந்து சமூக தலைவர் சதாசிவம், அழகன்குளம் ஜமாத்அம் பலம், பாரூக்,முன்னாள் சங்க செயலாளர் பக்ருல் அமீன் உள்பட பலர்கலந்துகொண் டனர். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் பொதுஜனசங்க விழா குழுவினர் செய்தி ருந்தனர்.
AdiraiPost
அழகன்குளம்
சங்கம்
மீலாது விழா
முஸ்லிம்
முஸ்லிம் பொதுஜன சங்கம் சார்பில் அழகன்குளத்தில் மீலாது விழா
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்