Breaking News
recent

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்

1)அரசியல் வேண்டாம் என்ற பயணத்தில் இருக்கும் த.த.ஜ. அத்தின் தற்போதைய தேர்தல் நிலைப்பாட்டினை வரலாறு மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். மயிலாடுதுறையில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட த.த.ஜ. வேறு யாரை ஆதரிக்கப்போகிறது? காங்கிரஸிற்கும் ஆதரவில்லை, அ.தி.மு.க.விற்கும் ஆதரவில்லை என்கிற போது வேறு யாரைதான் ஆதரிக்க போகிறது? .வரும் நாடாளுமன்றத்தில் தமிழக சார்பில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெற இயலாமல் போகுமேயானால் அதற்கு த.த.ஜ. அத்தும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தி.மு.க.விற்கு ஆதரவு என்று கூறும் த.த.ஜ. தி.மு.க. சமுதாய துரோகங்களே செய்யவில்லை என்று சாட்சிக் கூறத் தாயாரா? இல்லை கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுப்பதும், குண்டுவெடிப்பினை காரணம்காட்டி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பியதும், ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்துவருவதும், உலகம் கண்டிராத குஜ்ராத் இனப்படுகொலையை தலைமை ஏற்று நடத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு துணை நின்றதும், தற்போதை தேர்தலில் கூட ஒரு முஸ்லிமிற்கு கூட போட்யிட வாய்ப்பு வழங்காததும், தன்னுடைய குடும்பத்தினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் இன்றுவரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்காதததும் ம.ம.க.யின் சமுதாய துரோகங்களுக்கு ஒப்பிடுகையில் சாதாரணமானதுதான் என்று கூறுகிறார்களோ என்னவோ?

2). த.த.ஜ. தி.மு.க.வை ஆதரிப்பதில் சில காரணங்கள் இருந்தாலும் ம.ம.க. வேட்பாளர்கள் எங்கு நின்றாலும், யார் நின்றாலும் தோற்கடிப்போம் என அழைப்பு விடுப்பதில்தான் எமக்கு ஆட்சேபம். மதிப்புமிக்க முஸ்லிம்கள் ஓட்டானது சிதறுண்டு மதிப்பிழந்து போவதனாலேயே நாம். த.த.ஜ.அத்தின் நிலைப்பாட்டினை விமர்சித்தோம். எங்கள் ஊர் மயிலாடுதுறை தொகுதியில் வருகிறது. எங்கள் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ் போன்ற ஒரு இஸ்லாமியனின் வெற்றி த.த.ஜ. அத்தின் நிலைப்பாட்டினால் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமே விமர்சன் த்திற்கான காரணம்.
வக்ப் வாரியத்தின் தலைவர் பதவிக்கு த.த.ஜ. அத்தினை சார்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரைக்படுவதாக செய்திகள் கசிகின்றன. பொறுத்திருந்துப் பார்ப்போம்
திமுகவிற்கு ஆதரவு எனும் ததஜவின் நிலைப்பாடு சரிதான். மற்ற திமுக அல்லாத கூட்டணி கட்சிகள் பொட்டியிடும் தொகுதியில் என்ன செய்வது என்பதுதானே கேள்வி. அந்த வேளையில் மயிலாடுதுரையில் ஏன் மமகவை ஆதரிக்க கூடாது என்பதற்கு ததஜவிடம் சரியான பதில் இல்லை தான்.

3)அன்புச் சகோதரர்களுக்கு,
தமுமுகவின் நிறுவனரான குணங்குடி ஹனீஃபா அவர்களிடமிருந்து மீளெழுச்சி பெற்றபோதிலிருந்தே 'அரசியலில் பங்கு பெற வேண்டும்; வேண்டாம்' என்ற இரு வேறுபட்ட கருத்துகளை அதன் தலைவர்கள் கொண்டிருந்தனர் என்பது ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

'தமுமுக அரசியலில் பங்கு வகிக்காது; பதவி பெறாது' என்பது பீஜேயின் உறுதியான நிலைபாடாகவும் 'அரசியல் வேண்டும்' என்பது இப்போதைய தலவர்களான பேரா. ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலீ போன்றோரின் வெளிப்படுத்தாத உள்ளக் கிடக்கையாகவும் அப்போது கிடந்தது.

இப்போது தமுமுக அரசியலில் இறங்கி, மமக கண்ட கையோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால், காலங்காலமாகப் 'பதவி பெறப் போவதில்லை' என்று அன்று முதல் இன்றுவரை மேடை தோறும் முழங்கிய ததஜ, வாரியத் தலைவர் பொறுப்புக்குத் தலையசைத்தால் முஸ்லிம்களிடத்தில் அது செல்லாக் காசாகி விடும்.

தவிர,
தமுமுகவைத் தோற்கடிப்பது என்னவோ மார்க்கக் கடமையைப்போல் ததஜ பிம்பம் காட்டுவது கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

4)நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயலும் முஸ்லிமைத் தோற்கடித்து விட்டு, 'முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என்று 'உணர்வு' கண்ணீர் வடிக்கப் போகிறதா?

அல்லது,
'நம் சகோதரன்தானே, வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் போகட்டுமே!' என்று தன் நிலைபாடை மாற்றிக் கொள்ளப் போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

5)தவ்ஹீத் ஜமாத்தின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது.திமுக அதிமுக போடும் அர்த்தமற்ற அரசியல் கோமாளித்தனத்தை இது பிரதிபளிக்கிறது.
தமுமுக வை பிஜேபியோடு ஒப்பிடுவதும், பிஜேவை மோடியோடு ஒப்பிடுவதும். கீழ்த்தரமான விசயங்கள்.

நான் தவ்ஹீத்வாதி. பிஜே சொல்வதுதான் சரி என்று நினைத்தாள் நான் எங்கள் தொகுதியில் ரித்தீஸ் என்ற காமெடியனுக்குதான் வாக்களிக்க வேண்டும்.இதற்கு நான் தயார் இல்லை.பண பலத்தின் மூலம் அரசியல் பன்னும் ரித்தீஸ் தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்ததை சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கும், நமது பிரச்சனைகள் நிச்சயம் கண்டுகொள்ளப்பட மாட்டாது.


6)நமது ஓட்டை திமுகவிற்கு போட்டு வீணடிப்பதை விட தமுமுகவிற்கு வாக்களித்து நம் பலத்தை காண்பித்தாள் மற்ற கட்சிகள் நம்மையும் திரும்பி பார்க்கும்.
நான் பீஜே மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அதே நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எனக்கு வேண்டப் பட்டவர் அல்ல.
அரசியல் என்று வரும்போது மமகவைத்தான் ஆதரிப்பேன். பீஜே பயான் கேட்பேன். அதற்காக ஓட்டுப் போட மாட்டேன்.
திமுகவுடன் அதிமுக சேர்ந்தாலும் மமகவும் ததஜவும் சேராதுபோல.
நல்ல சகோதரத்துவம், போங்க.
அல்லாஹு அக்பர்!

7)தற்கால பிஜேயின் செயல்பாடுகளையும் நிலைபாடுகளையும் குறித்து நாம் அறிவோம். மார்க்க விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் முன்னுக்குப் பின் முரண், பொய், அவதூறு, மார்க்கத்தைத் தன் வசதிக்கும் தன் அறிவுக்கும் ஏற்றாற் போன்று வளைத்தொடித்தல்...... பட்டியல் நீளூம். எனவே, தூரநோக்கற்ற குறுகிய சிந்தையுடன் எடுக்கும் அவரின் நிலைபாடுகளைக் குறித்து சமுதாயத்திற்கு அதிகம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனினும் 'மமகவைத் தோற்கடித்தே தீருவோம்' என சபதம் செய்து களமிறங்கியிருக்கும் ததஜவின் நிலைபாடு, சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, நடுநிலையோடு எடுக்கப்பட்ட நிலையா? என்பதை உணர்வில் வெளியிட்டுள்ள விளக்கமே மிக அழகாக எடுத்துக்காட்டும்.

மமகவைத் தோற்கடித்தே தீருவது என தீர்மானம் போடப்பட்டுள்ளதன் காரணாமாக பிஜே சொல்வது::
1. அவர்கள் ரவுடியிசம் செய்தனர்
2. கட்டப்பஞ்சாயத்து செய்தனர்
3. சமுதாயத்திற்குத் துரோகம் இழைத்தனர்
4. அரசியலில் இறங்கமாட்டோம் என சத்தியம் செய்து விட்டு வாக்குறுதி மீறினர்.
5. சமுதாய சொத்துக்களை அடித்தும் மிரட்டியும் கொள்ளையடித்தனர்.
6. 'ஃபித்ரா, சுனாமி போன்ற வசூல் பணங்களில் கையாடல் செய்தனர்.
7. இவற்றிற்கெல்லாம் மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் செயலாற்றினர்.
இவற்றைத் தவிர பிற வலுவான காரணங்கள் ஏதுமில்லை.

பிஜே கூறும் இவையனைத்தையும் மமகவினர் செய்தனர் என்றே வைத்துக் கொள்வோம்(4. வாக்குறுதி மீறினர் என்பது மட்டும் எனக்குத் தெரிந்து உண்மை)

தற்போதைய தேர்தலில் இவர்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவினர் இவ்விஷயங்களில் எல்லாம் யோக்கியர்கள் என இவர் கூற வருகிறாரா?

ரவுடியிசம், கட்டைப்பஞ்சாயத்துக்குப் பெயர் போனவர்கள் மு.க. அழகிரியும் ஸ்டாலினும்.

தமிழகத்தைப் பகுதிவாரியாக பிரித்து பட்டா போட்டு கொடுக்காத குறையாக கருணாநிதி தனது மகன், குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார்.

சமுதாய வஞ்சனை, துரோகம் இவையனைத்துக்கும் முழு சொந்தக்காரர் கருணாநிதி தான். கடந்த 50 ஆண்டுகாலமாக கருணாநிதி சமுதாயத்தை வஞ்சித்து வருவதைப் போன்று வேறு யார் வஞ்சித்தார்?

அனைத்தையும் விடுவோம். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மனம் வராத கருணாநிதி, எந்த வகையில் சமுதாய பாதுகாவலன் ஆவார்?. இவரை நம்பலாம், முஸ்லிம்களாகிய, இதுவே முதல் முறையாக அரசியல் களம் காணும் மமகவினரை நம்பக் கூடாதா?

'8)எதிர்காலத்தில் இவர்களும் பதவி பெற்ற பின்னர் நம்மை வஞ்சித்து விடுவர்' என குறி சொல்வதற்கு ததஜவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. எதிர்காலத்தில் நடப்பதைக் கூறும் அளவுக்கு பிஜேவுக்கு அல்லாஹ்வின் அதிகாரம் கிடைத்து விட்டதோ?

அப்படியே அவர்கள் வஞ்சித்து விடுவர் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த 50 ஆண்டுகாலமாக முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து, சிங்கிள் கிளாஸ் டீக்குச் சென்னை ப்ளாட்ஃபார்மில் அலைந்து திரிந்த கருணாநிதி, இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடிக்கும் அளவுக்குக் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகியிருக்கிறாரே, அதனை ஒரு முஸ்லிம் அனுபவிக்க போகிறார் எனில் அனுபவித்து விட்டுப் போகட்டுமே?. கருணாநிதிக்குச் சொத்தோ, அதிகாரமோ இனி ஒன்று புதிதாக தேவையில்லை. அனைத்திலும் பின் தங்கியிருக்கும் இச்சமுதாயத்திலிருந்து ஒருவராவது ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரராக வந்து விட்டுப் போகட்டுமே!

பொய்யிலும் ஏமாற்றிலும் நெஞ்சில் குத்தும் துரோகத்திலும் பெயர்பெற்ற கருணாநிதிக்குக் கொடுப்பதை ஒரு முஸ்லிமுக்குக் கொடுத்து விட்டுப் போகலாம்.

இனி, வாக்குறுதி மீறுதல்.

மீறவே கூடாத, மீறி விட்டால் ஷிர்க்கை விட மிகப் பெரிய பாவத்துக்குரிய வாக்கு மீறுதலா மமகவினர் செய்து விட்டனர்?

9)சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயம் எனில் வாக்குமீறுவதில் என்ன தவறு இருக்கிறது?. இது கூடாது என்பதற்கு மார்க்கத்தில் பிஜேயிடம் ஆதாரம் கேட்கமுடியாது. ஏனெனில், மார்க்கத்தைத் தன் விருப்பத்திற்கு வளைத்தொடிப்பதில் இன்று பிஜேயும் சளைத்தவரல்ல.

எனவே வாக்குமீறுதல், சமுதாயநலனை விட பெரிய விஷயமாக நமக்குப்படவில்லை. வாக்கு மீறினால் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என மார்க்கம் வரையறுத்துள்ளது. அதனால், அவ்விஷயத்தில் ரொம்பவே பிஜே அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இனி, அப்படியே வாக்குமீறி விட்டனர், அதனால் தான் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்றால் கூட,

'சென்னை வாழ்வுரிமை மாநாட்டில் அம்மா!!! செயலலிதா முஸ்லிம் சமுதாயத்தின் முன்னிலையில், இதே பிஜேயின் முன்னிலையில் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிக்கு எதிராக அடுத்த தேர்தலிலேயே நடந்து கொண்டார். வாக்குறுதி மீறுபவர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ள ததஜ, அதிமுகவை அழிப்பதற்கு - அதனைத் தோற்கடித்தே தீருவோம் என்று எப்பொழுதாவது தீர்மானம் போட்டதா?. கடந்த தேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அம்மாவின் பின்னால் வாலாட்டிச் சென்றனர்?

எனவே வாக்குறுதி மீறுதலிலும் நீதமான அணுகுமுறை பிஜேயிடம் இல்லை. அந்தக் காரணத்தைக் கூறுவதற்கு பிஜேக்கோ ததஜவிற்கோ எந்த அருகதையும் இல்லை.

10)'ஃபித்ரா, சுனாமி வசூலைக் கொள்ளையடித்தனர் விஷயம், சிரிப்பு தான் வருகிறது!

ததஜ வெளியிட்ட சுனாமி வசூல் கணக்கில்....

உணர்வில் விளம்பரத்திற்கு 50000, ஆட்டோ செலவு, தொண்டர்கள் சீருடை, தொப்பி வாங்க என நீண்ட பட்டியல் போட்டிருந்தனரே?

சுனாமி உதவிக்காக அனுப்பியவர்களின் பணத்தை இதற்கெல்லாம் செலவழித்தோம் என கணக்குக் காட்ட இவர்களுக்கு வெட்கமாக இல்லை? சூனாமிக்காக வாங்கப்பட்ட தொண்டர் சீருடையில் ததஜ என அடித்தல்லவா போட்டிருந்தனர்? ததஜவின் சீருடைக்குச் சுனாமி வசூல் பணமா?

உணர்வில் 'சுனாமிக்கு உதவுங்கள்' என்ற விளம்பரம் செய்ததற்கு உதவி செய்தவர்களின் பணமா?

சுனாமி பணத்தைத் தங்கள் விருப்பத்திற்குச் செலவு செய்து, அதனைப் பட்டியல் போட்டும் காண்பித்த ததஜவினருக்குத் தமுமுகவினர் சுனாமி பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர் எனக் கூற எவ்வித அருகதையும் இல்லை.

இனி என்ன உள்ளது? ஒரே விஷயம் - தமுமுக ததஜவிற்கு எதிராக செயல்பட்டது!

ஆம், முஸ்லிமல்லாத, 50 ஆண்டுகாலமாக சமுதாயத்தை நெஞ்சில் குத்தி வாழ்ந்து வரும் கருணாநிதிக்குக் கேட்காமலே ஆதரவு கொடுத்து விட்டு, எந்த ஒரு அரசியல் கட்சி கூட போடாத அளவிற்குச் சொந்தம் சகோதரர்களைத் தோற்கடித்தே தீருவோம் என(கவனிக்க: மோடிக்குக் காவடி தூக்கிய செயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என இவர்கள் தீர்மானம் போடவில்லை. மாறாக அவளுடன் இதுவரை ஒட்டியே இருந்தனர்), தீர்மானம் போட்டு பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இவர்களுக்குச் சமுதாய துரோகம் முற்றிப் போய் இருப்பதற்குத் தனிப்பட்ட பகை மட்டுமே காரணம்! அல்லாமல் சமுதாய நோக்கம் இதில் அறவே இல்லை!

11)சமுதாயம் விழித்துக் கொண்டாகி விட்டது. பிஜே சொல்வதெல்லாம் சரி தான் என ததஜவில் இருப்பவர்கள் வேண்டுமெனில் தலையாட்டி செல்லலாம். சமுதாயம் பிஜேயை நன்றாக புரிந்து கொண்டாகி விட்டது!

இனி திமுகவிற்கு ஆதரவு என கேட்காமலே ததஜ துண்டு விரித்தது சரியா? என பார்ப்போம்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு உருப்படியாக சொன்ன ஒரே காரணம் - கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மை தான்.

ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் துரோகிக்கு வாக்குறுதி கொடுக்க பிஜேக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வேண்டுமெனில் ததஜ சார்பில் பிஜே வாக்கு கொடுத்தார் என கூறி கொள்ளுங்கள்.

சமுதாயம் தன் நன்றிக்கடனை ஏற்கெனவே தமுமுக மூலம் கொடுத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் ததஜ பேசலாம் எனில், அதனைப் போன்ற சம உரிமை தமுமுகவிற்கும் உள்ளது. தமுமுக சமுதாயத்தின் சார்பில் ஏற்கெனவே நன்றி கடனை அடைத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் நன்றி கடன் அடைக்க தமுமுகவுக்கு உரிமை இல்லை, எனில் ததஜவுக்கும் அந்த உரிமை இல்லை.

சமுதாயத்தின் சார்பில் ததஜ செய்யலாம் எனில் தமுமுகவும் செய்யலாம்.

எனவே எவ்வகையில் நோக்கினாலும் துரோகி கருணாநிதிக்கு மற்றொரு முறை நன்றி கடன் அடைக்க வேண்டிய தேவையே இல்லை.

அப்படியே வலுக்கட்டாயமாக அடைத்தே தீர வேண்டும் எனில், பிஜேயும் பிஜே கூறுவதை எல்லாம் சரி தான் என கேட்டு தலையாட்டும் ததஜவினரும் துரோகி கருணாநிதிக்குத் தங்களின் நன்றி கடனை அடைத்து மோட்சம் பெறுங்கள்!!!
பரவலாக பார்க்கும்போது, த.த.ஜமாத்தின் ம.ம.க. எதிர்ப்பு என்பது வரவேற்கப்படாத ஒன்றாக தெரிகிறது. சமுதாய வாக்குகள் நீர்த்துப் போகத் தான் த.த.ஜமாத்தின் முடிவு வழி வகுக்கும். ஆக.. சமுதாய இயக்கங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமையில்லாத இருண்ட பாதையைத் தான் காட்டுகின்றன.

12)பழையதை கிளரிவிட்டு ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக சுயநலம் மனோயிச்சை காழ்ப்புணர்ச்சி என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து அணுகி செயல்படும் போக்கு சரிக்கும் தவறுக்கும் உள்ள் வேறுபாட்டை மறைத்து விடும்..

இவ்வுண்மையை அனைவரும் உணர்ந்து விழிப்புணர்வோடு ஒருவரையொருவர் எதிரியாக கருதி செயல்படாமல், தூய்மையான, சுமூகமான தியாக மனப்பான்மையுடன் வெறுப்பையும் குரோதத்தையும் களைந்து செயல் படாதவரை முஸ்லிம் சமுதாய நலன் என்பதும் வெரும் பேச்சுதான் என்பதிலும் சந்தேகமில்லை. மேலும் இதனால் அவர்களுக்கும் மறுமையில் ஏதும் நலன் விளையும் வாய்பில்லை என்பதும் தெளிவு.

இதை தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்கள் உணர்ந்திடும் வரை அவர்கள் தலைவர்கள் உணரமாட்டார்கள்,, முஸ்லிம்கள் நிலையிலும் ஏதும் நல்லதொரு மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியமுமில்லை...

அல்லாஹ் இதனை மாற்றிட உதவியும் அருளும் புரியவேண்டும். என பிராத்திப்போமாக.... ஆமீன்

13)சமுதாய நலனைக் குறித்து நீங்கள் உண்மையாக கவலை கொண்டால்.....

இதுகாலம் வரை சமுதாயத்தை வஞ்சித்த திமுகவை விட்டுவிடுவோம். இந்தத் தேர்தலில் ஒரு சீட்டில் கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது சமுதாய நலனா?

அதிமுக, பாஜகவின் பினாமி, அது சமுதாயத்தின் எதிரி எனில், திமுக சமுதாயத்தின் துரோகி என்பதை வசதியாக சகோதரர் PJ மறந்து விடுகிறார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக சுமார் 167 முஸ்லிம்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம். ஆனால், அந்தக் குண்டுவெடிப்பு நடக்கக் காரணமான 19 முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கோவை கலவரம் சம்பவத்தில் எத்தனை பேர் எத்தனை ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் சிறையில் கிடந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா?

கருணாநிதி, துரோகிகளை விடக் கேவலமானவன் என்பதற்கு இதனை விட பெரிய சான்று எது வேண்டும்?

அப்படிப்பட்டவனுடன் பேரம் பேசுவது தான் சரியான நிலை. அல்லாமல் சமுதாயத்திற்குப் போவதற்கு போக்கிடம் இல்லை என்பதற்காக அந்தத் துரோகிக்குச் சமுதாய ஓட்டுகளைக் கண்ணை மூடி வாரி வழங்குவது சுத்த மடத்தனம்.

14)தமுமுக தன்னை விட்டுப் போனாலும் நஷ்டமில்லை, ததஜ மூலமாக இச்சமுதாயத்தின் ஓட்டுகளைக் கூறு போட்டு விடலாம் என்பதை முன்னரே உணர்ந்ததால் தானே, குறைந்த பட்சம் ஒரே ஒரு முஸ்லிமையாவது திமுக வேட்பாளர்களில் கூட இந்தக் கருணாநிதி நிறுத்தவில்லை? இதனை விடப் பச்சை துரோகியும் வஞ்சகனும் உலகில் வேறு யாராவது உண்டா?

முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கட்டும். பிஜே பேசி விட்டால் எல்லாம் சரி தான் என்ற நிலை 90 களில் இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதிலும் சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது போல் பேச்சை மாற்றி மாற்றி பேசுவதிலும் பிஜேக்குப் போட்டியாக இப்பொழுது சமுதாயத்தில் கூட எவரும் இல்லை என்பதைச் சமுதாயம் நன்றாக உணர்ந்துள்ளது.

பாஜகவைத் தமிழகத்தில் இறக்குமதி செய்த, இரத்தக்காட்டேறி மோடிக்குப் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து கூறி உச்சி முகர்ந்த இன வெறிபிடித்த ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என ததஜ அறிவித்திருந்தால் அதற்கு சமுதாய நலனின் மீது அக்கறை உண்டு எனக் கூறலாம்.

திமுகவிற்கு ஆதரவாம்; மமக போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சாக பாடுபடுவார்களாம்.

அப்ப பாஜக, அதிமுக?

15).இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் குதிரை சவாரி என்பதற்கும் பிஜே விளக்கம் அளித்தால், கேட்டுப் புல்லரித்துப் போகின்றவர்களுக்கு புழகாங்கிதமடைந்து முழங்க வாய்ப்பாக இருக்கும்.
இடஒதுக்கீடு கொடுத்ததற்காக அடுத்தத் தேர்தலில் நன்றிக்கடனாக திமுகவை ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்கள்! அதை தமுமுகவிலோ அல்லது ஒத்தக்கருத்டுடைய ஏதேனும் முஸ்லிம் கட்சியிலிருந்தோ செய்திருக்கலாமே? தவ்ஹீதுப் பிரச்சாரமே எங்கள் முதர்பனி என்று வெளியேறி (தமுமுகவை உடைத்து) முன்பு ஜெயலலிதா தற்போது கருணாநிதி என்று லீகர்களைவிடவும் மோசமாக முஸ்லிம்களை அரசியல் வழிகெடுக்க ததஜ ஏன்? என்பதே பலரின் கேள்வி.

ததஜ அரசியல் கட்சியா மார்க்கப்பிரச்சார அமைப்பா? திமுக முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களாகச் சென்ற சட்டமன்றத் தேர்தலில் சகோ.பிஜே செய்த பிரச்சாரங்களெல்லாம் சந்தர்ப்பவாதக் குற்ற்ச்சாட்டுக்களா? அல்லது திமுக அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டதா?

ஓர் அரசியல்வாதி சந்தர்ப்பவாதியா இருக்கலாம்; ஆனால் தவ்ஹீதுவாதி எக்காரணம் கொண்டு சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது.

16)பிஜே தமுமுகவிலிருந்து வெளியேறக்காரணமே, அவர் கூறுவதற்கு அங்கு யாரும் செவி சாய்க்கத் தயாராகாதது தான்.

வெறும் அடிப்படை உறுப்பினராகத் தான் அவர் இருப்பார். ஆனால், இயக்கத்தின் தலைமையை விட அதிகாரம் படைத்தவராக அவர் இருப்பார்; இருக்க வேண்டும். அவரின் பேச்சு எடுபடவில்லை என்ற நிலை வந்தால், உடனடியாக பிளவு தான்.

இதற்கு சரியான உதாரணம்:

சகோதரர் ஹாமித் பக்ரீ கைது செய்யப்பட்ட போது, தமுமுக தலைமையிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகும் முன்னரே அன்று இரவு வின் தொலைகாட்சியில் தோன்றி, 'தமுமுக ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் ஜாமீனூக்காகவோ அவர் வழக்கு விஷயமாகவோ எந்த விஷயத்திலும் உதவி புரியாது' என அறிக்கை வெளியிட்டது தான்.

இந்நேரத்தில், பிஜே தமுமுகவின் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும் தான். 'மனம் திறந்த மடல்' எழுதி விட்டு, அமைப்பாளர் பதவியைக் கூட அந்நேரத்தில் விட்டு விலகியிருந்தார்.

17)தமுமுகவின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை 'அரசியலில் கால் பதித்தால் மட்டுமே, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு ஓரளவாவது தீர்வு கொண்டு வரமுடியும்' என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், பிஜே இதற்கு நேர் முரணான கருத்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, தவ்ஹீதை வளர்க்க தமுமுக வேண்டும் அவ்வளவு தான். அதற்கு மேலாக அரசியலில் இறங்க வேண்டும் என்பதற்கு அவர் எதிர் கருத்தில் இருந்தார்.

தமுமுகவில் அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பிஜேயின் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற நிலை வந்தப் பிறகு தான், என்னென்னவோ காரணங்களை அடுக்கி தமுமுகவை உடைத்தார்.

இது உண்மையில்லை எனில், 'தவ்ஹீத் பிரச்சாரத்திற்குத் தமுமுக எதிராக உள்ளது என கூறி வெளியேறியவர், முஸ்லிம் விரோதி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பாரா?'

அரசியல் வேண்டாம் என்றவர், தொடர்ந்து அரசியலில் தலையை நுழைத்து ஏன் தான் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது தான் புரியவே செய்யாத விஷயம்.

'18)தமுமுக அரசியலில் போட்டியிடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. அந்தக் கருத்து பி.ஜேயின் கருத்துத்தான் ஆரம்பம் முதலே ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர்அலியும் அரசியல் பிரவேசம் சமுதாயத்திதேவை என்று பல முறை கூறி உள்ளார்கள் பல செயற்குழு பொதுக்குழுவில் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளன அதிகப்படியான ஆதவு வந்தவுடன் அரசியலுக்குப் போனால் நான் இயக்கத்த விட்டு போய்விடுவேன் என்று பிஜே மிரட்டுவார் உடனே அவை கைவிடப்படும். அரசியல் பிரவேசம் கூடாது என்று தமுமுகவோ அதன் நிர்வாகிகயோ ஒரு போதும் சொன்னதில்லை பிஜேயைத் தவிர. '

இது முட்ரிலும் உண்மை. நான் கலந்து கொண்ட திருச்சி பொதுகுலுவிலும் இப்படிதான் 'அரசியலுக்கு வந்தால் நான் விலகி விடுவென் என்றார்.' அப்பொலுது புதிய தமிழகத்தை அதரிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கூடியபொழுது இவ்வாரு கூறினார்.

19)நான் இப்பொழுது எந்த இயக்கத்திலும் இல்லை. எதை மறைத்தாலும் சுயநலத்துக்காக தவ்ஹீத்வாதிகளை கூருபோட்ட பெருமை அண்ணன் பீஜே அவர்களைதான் சாரும்.

20)ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டதிலிருந்து முஸ்லிம் சகோதரர்களூக்கு எதிரான தன் தனிப்பட்ட பகையை வெளிப்படுத்தி விட்டது. இதுவரை பாஜகவையோ அதிமுகவையோ தோற்கடித்தே தீருவோம் என ஒரு பெயருக்குக் கூட தீர்மானம் நிறைவேற்றாத ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டத்திலிருந்து ததஜ எதிரிகளின் கையாளாக ஆகி விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.

21)துரோகி கருணாநிதிக்காகவும் அவரின் கட்சி சார்பாக போட்டியிடும் ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளுக்காகவும் தேர்தல் பணி செய்வதற்கு, ததஜ கூறிய பிரதான காரணங்களில் ஒன்று - இடஒதுக்கீடு அதிகரிப்பதாகவும் முந்தைய இடஒதுக்கீடு தவறு சீர் செய்யபடும் என்றும் - திமுக ததஜவிற்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருக்கிறது என்பதே.

ஆனால் அவ்வாறான எந்த ஒர்ர் உறுதிமொழியும் திமுக ததஜவிற்கு இதுவரை கொடுக்கவில்லை
தௌஹீது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யின் கூடாரமாகவும் சமுதாய மக்களிடம் எவ்வித கூச்சமும் இன்றி பொய்களை அவிழ்த்து விடும் மானங்கெட்டவர்களாகவும் ததஜ மாறி விட்டது.

22)பி ஜெ தனிச்சின்னத்தில் நின்றாலும் இந்த மமக வை ஆதரிக்கும் கூட்டம் அவருக்கு உழைக்க வாக்களிக்க முன்பந்தியில் நிற்கும். யாருடன் இருந்தாலும் தனிசின்னம் அதிக தொகுதிகள் அதில் மமக பிரளவில்லை. வேலூர் தேனி தொகுதிகளில் அந்த முன்னணி நிற்கவில்லை.மத்திய சென்னையில் சகோதரர் ஹைதர்அலி பெயர் உறுதிசெய்யப்பட்ட பின்புதான் அதிமுக ஆளை மாற்றியது. இது சங் டிவி கூட்டம் மறைமுகமாக ஆர் எஸ் எஸ் வழி ஜெயலலிதாவிற்கு கொடுத்த பிரஸ்ஸர். சரத்குமார் கூட்டணியையும் சங் டிவி ராதிகா வழி பிரஸ்ஸர் கொடுத்து பிரித்தது. வைகோவை எதிர்த்து கார்த்திக்கை நிறுத்தி பிரஸ்ஸர் கொடுக்க நினைத்த திமுக அதை கொல்லைபுறம் வழி நடத்தியது.தொடர்ந்து செய்தி வாசிப்பவர்கள் கூர்ந்து நோக்குபவர்கள் நன்கு அறிவர்.

இடஒதுக்கீடு தந்தற்காக ஆதரவு கடிதம் கொடுத்த சில நாட்களுக்கு பிறகு முத்துப்பேட்டை பிரச்சனையில் பி ஜே கூட்டத்தில் பேசும் போது கருணாநிதியை குறிப்பிட்டு நீ 3.5 தந்ததாக பேப்பரில் சொன்னாய். நடைமுறையில் இல்லை. முஸ்லீம்களுக்கு பாதுகாப்பாய் இருப்பேன் என்றாய் இன்று துரோகம் செய்கிறாய். நீயும் பேப்பரில் தந்தது போல் நாங்களும் பேப்பரில் தந்தது முடிந்துவிட்டது. இனி அதற்கு மதிப்பில்லை என்று பலமுறை அறிவித்த பி ஜே இப்போது அதை பேசுவது அவருக்கு ஒரு நாக்கா அல்லது பலதா.இஸ்லாமியனுக்கு வெட்கம் ஈமானில் உள்ளது என்று நபிகள் சொன்னார். பி ஜே யிற்கும் அவரை அரசியலில் ( மார்க்கத்தில் அல்ல) தாங்குகிறவர்களுக்கும் அது இல்லையா.; நாகர்கோவிலில் தவ்ஹீத் மறுமலர்ச்சிக்கு 1976 முதல் வித்திட்டபோதும் 80களின் முடிவுவரை நன்கு அறிந்தவன்.
சகோதரர்களே! அந்த பி ஜே இவர் அல்ல. அன்று அவருடன் இருந்த கூட்டமும் இப்போ இவரின் தவறான செயல்களால் அவருடன் இல்லை.

23)ம.ம.க வின் தேர்தல் நிலையை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பேச தனிசின்னத்தில் சமுக பிரதிநிதிகள் சட்ட சபை பாராளுமன்றங்களில் வேண்டும் அதற்கு தீர்வு சொல்லுங்கள். எனவே உள்ளுர் சகோதர சகோதரிகள் மமக விற்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் குடும்பங்களுக்கு தெரிவித்து மமக விற்பு வாக்களியுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.

24)ததஜவிடம் நியாயமான கேள்விகளுக்கு எப்பொழுதுமே பதில் இருக்காது.

இங்கு கேள்வி ஒன்று தான்:

ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளையும் நாற்காலிக்காக பாஜகவுடன் மானம், சூடு, சுரணை இன்றி ஒருமுறை கூட்டணி வைத்துக் கொண்ட போலி திராவிட வேடம் இடும் கருணாநிதியையும் வெற்றி பெற பொய் காரணம் கூறி களமிறங்கி பணியாற்றும் ததஜ, 'மமகவினர் போட்டியிடும் தொகுதியில் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சுடன் களப்பணியாற்றுவோம்' என தீர்மானம் போட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

துரோகிகள், ஊழல் பேர்வழிகள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள், சமுதாய எதிரிகள், பதவி பித்து பிடித்து அலையும் பேமானிகள்..... இப்படிப்பட்டவை எல்லாம் தான் காரணம் எனில்,

இவை அனைத்துக்கும் முழு தகுதி படைத்தவர் கருணாநிதி தான்.

முஸ்லிம் சமுதாயத்தை நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் சுமார் 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கருணாநிதியை நம்புவார்களாம். ஆனால், நேற்றுவரை ஒன்றாக இருந்து அடியும் மிதியும் கொண்டு 'மனம் திறந்த மடல் மூலம்', 'மறுமைக்காகவே உழைப்பவர்கள்' என்றும் 'தன்னலம் பாரா சேவகர்கள்' என்றும் பலவாறாக புகழ்ந்து அவர்களுக்கு எதிராக வாயசைக்க வருபவர்களுக்கு எதிராக மறுமையில் இறைவனிடம் நான் முறையிடுவேன் என தன்னால் மெச்சிப் பாராட்டப்பட்டவர்களை, நம்பமாட்டார்களாம்.

குடிகாரன் கூட காலையில் எழுந்தால் தெளிந்து விடுவான். இரவில் உளறியதை நினைத்து வெட்கப்படவும் செய்வான்.

ஆனால், பிஜேயோ தன் வாய்க்குத் தானே எதிரி என்பதற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரைத் தலைமையாகக் கொண்ட ததஜவின் தீர்மானங்கள் அனைத்துமே தனிப்பட்ட பகைமையின் பிரதிபலிப்புகளே.

இதனைச் சமுதாயம் மிக நன்றாக உணர்ந்தே இருக்கிறது.

சமுதாயத்தை நீண்டகாலத்துக்கு யாராலும் ஏமாற்ற முடியாது.

25')'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியும்...
நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்
ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக சிந்தித்து செய்ல்படகூடியவர்களா?

அல்லது

எந்த அழைப்பிதலும் இல்லாமள் (மமகவை (முஸ்லிம்களை) உயிரை கொடுத்து தோற்கடிக்க வேண்டும்) என்பதற்காக கலைஞரிடம் கூனி குறுகி குனிந்து ஆதரவு கடிதத்தை கொடுத்துல்லார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக செய்ல்படகூடியவர்களா?????

சகோதரர்களே! சிந்தியுங்கள்.... நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.... இறையச்சத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கீழுள்ள ஹதீஸை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே உணர்ந்து கொள்ளுங்கள் யார் உன்மையான தவ்ஹீத்வாதிகள் என்று.

லாத்த ஹாஸதூ வலாத்த நாஜஸு வலாத்த பாகலூ வலாத்த தபாரூ வலா பய்ழ பய்ழகும் அலா பய்ழ பய்ழின் வ கூன இபாதல்லாஹி இஹ்வானா.
அல் முஸ்லிமு அஹ்லுல் முஸ்லிமி லா எதழிமுஹூ வலா யஹ்ஸிலுஹூ வலா யஹ்ஸிருஹூ அத்தக்ஃவா ஆஹூனா. அய்யுஸிர்ரு தலாத மர்ராஅத். பி ஹஸ்இம்ரின் மினஷ்ஷர்ரீ அய்யுஹ்கிர அஹாஹுல் முஸ்லிமா, குல்லு முஸ்லிமி அலல் முஸ்லிமி ஹாரம் தமுஹு வமாலுஹு வ இர்துஹூ. (ரவாஹூல் முஸ்லிம்)

அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் “பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிரும், பொருளும் அவரது மானம் உள்பட மூன்று விஷயங்கள் ஹாராமாகும். (இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸாகும்)

……………..”நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்......(3: 103)
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காபீர்களை (உங்களுக்குஉற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......(4: 144)…..
முஸ்லிம் சகோதரர்களே ஒற்றுமையின் பக்கம் வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை ஆட்சியாளர்களாக்கி வைப்பான்.

THIS VIEWS TAKEN FROM READER COMMENT IN SATYAMARGAM.COM And http://mmkelection2009.blogspot.com/2009/04/blog-post_25.html

Thanks to Satyamargam.com and mmkelection.blogspot.com
முத்துப்பேட்டை தகவல்

முத்துப்பேட்டை தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.