Breaking News
recent

பர்தா என்றால் என்ன?

பர்தா என்றால் என்ன? என்பதன் பொருள் இந்நாளில் பலருக்கும் தெரிவதில்லை. இன்றைய பெண்கள் பர்தா என்ற பெயரில், ஜரிகை, சமிக்கி வேலைப்பாடு மிக்க ஒன்றை அணிந்து கொள்கிறார்கள். நம்முடைய அழகை மறப்பதற்காக வேண்டிய பர்தா, இன்று அடுத்தவர் பார்வையைக் கவரக் கூடியதாக உள்ளது வேதனையான விஷயம்.

பர்தாவுடைய திருவசனம் இறங்கியவுடன், சஹாபாப் பெண்மணிகள் தங்களைக் காக்கைகளைப் போல மறைத்துக் கொண்டார்கள் என்று ரிவாயத் இருக்கிறது. கருப்பு நிற உடையை பர்தாவாக அணிய வேண்டும் என்று இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது. இறைவன் தனது இல்லமான காபாவுக்குக் கூட கருநிற பர்தா அணிவித்தே இருக்கிறான்.

பெண்கள் ஒரு குடும்பத்தின் ஆணி வேர் போன்றவர்கள். ஒரு மரத்தில், காய்களும் கனிகளும் பூக்களும் பூத்துக் குலுங்க, அதன் வேர் தான் காரணம். அந்த வேரையே இறைவன் மண்ணுக்குள் தான் மறைத்து வைத்திருக்கான். அது போல பெண்களும் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.

மஹரமான ஆண்கள் முன்னிலையில் அன்றி யார் முன்பும் வரவோ, பேசவோ கூடாது. தன் சிறிய தந்தை, பெரிய தந்தை, தாயின் சகோதரிகளின் பிள்ளைகள், பலரும் நினைப்பது போல மஹரமல்ல. அவர்களை நிக்காஹ் முடிப்பது கூடும். யாரை நிக்காஹ் முடிப்பது கூடுமோ, அவர் முன்னால் திரையின்றி தோன்றக்கூடாது. அதே சமயம், மாமனார் மற்றும் மருமகன் முன்னால் தோன்றலாம். ஏனென்றால், அவர்களைத் திருமணம் முடிப்பது விலக்கப்பட்டுள்ளது.

கூடப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடி உறவு தவிர யாரும் யாருக்கும் சகோதரர் ஆக முடியாது. ஒரு அந்நிய ஆணுடன் ஒரு பெண் தனித்து இருக்கும் போது, சைத்தான் உடனிருப்பதாக ஹதீஸுடைய கருத்து இருக்கிறது. ஹதீஸ் பொய்யாகுமா?

ஒரு பெண்ணுடைய அழகு, தன் கணவருக்கு மட்டுமே சொந்தம். பாத்திமா(ரலி) அவர்கள் வெளியே செல்லும் போது ஒரு கிழவி போன்ற தோற்றத்தில் செல்வார்களாம். ஒரு பெண் வெளியே செல்லும் போது, அடுத்தவரைக் கவரும் வகையில் நறுமணம் கூட பூசக் கூடாது என்று சொல்லும் போது, பர்தாவில் அலங்காரம் என்பது நகைப்புக்குரிய செயல் அல்லவா?

நாம் பேணுதலாக இருப்பதுடன், நம் பிள்ளைகளையும் சிறுவயது முதலே பழக்க வேண்டும். பர்தாவில் இருந்தபடியே, பெரிய படிப்பு படித்து முன்னேறியவர்கள் இருக்கும் போது, இது எவ்வாறு சாத்தியப்படாமல் போகும். சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

-சுமஜ்லா.
SUMAZLA/சுமஜ்லா

SUMAZLA/சுமஜ்லா

2 கருத்துகள்:

  1. இறைவசனங்களின் மூலம் இஸ்லாம் பெண்ணுக்கு வலியுறுத்தக்கூடிய உடை அளவிலான கட்டுப்பாட்டை, அவளின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதாக ஒரு சாரார் பேசிக்கொண்டிருந்தாலும் பேசுபவர் ஒவ்வொருவரும் தத்தம் அளவிலான உடைக் கட்டுப்பாடுகளை தத்தம் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்றபடி அளவுகோலை வைத்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும்! அதை மீறும்போது அதன் மூலம் ஆபத்துக்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் சந்திக்கின்றனர்.
    very good work. Inshallah I will try to give some comment regarding the article via email...

    பதிலளிநீக்கு
  2. very nice article about burqa and written by a woman.I have a question sister,is there any compulsion or order to wear a black dress as a burda?I think "no".There is no any proof of this.

    இறைவன் தனது இல்லமான காபாவுக்குக் கூட கருநிற பர்தா அணிவித்தே இருக்கிறான்.This is totally wrong,this is done by the king,not by GOD.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.