ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு என்ற தொடர் கட்டுரையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணிப் பத்திரிகையில் பாவை சந்திரன் எழுதி வருகிறார்.
அதன் 12ஆவது பாகத்தில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை பல கோட்பாட்டு, தகவல் பிழைகளைக் கொண்டுள்ளது. முஸ்லிம் தமிழர்கள் என்ற சொற்பிரயோகத்தின் அரசியல் அர்த்தத்தை புரியாமல் அவரும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பியுள்ளார்.
இதனை இலங்கை முஸ்லிம்களது கவனத்திற்கு கொண்டு வருவது மிகவும் அவசியம். இலங்கைக்கு வெளியே -அதுவும் தமிழ்ச் சூழலில் முஸ்லிம் விவகாரம் எவ்வளவு தூரம் திரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்ற அறிவு எமக்குத் தேவை. அத்தோடு இவை தொடர்பாக சரியான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும். அதன் முதல் கட்டமாக அக்கட்டுரையை அவ்வாறே மீள்பிரசுரம் செய்கிறோம்.
முஸ்லிம்கள் இலங்கை முழுவ தும் பரவலாக வாழ்கிறார்கள். அதா வது கொழும்பு, குருநாகல், களுத் துறை, புத்தளம், கம்பஹா, அநுராத புரம், காலே, பொலனறுவை, மாத் தளை, அம்பாந்தோட்டை, மொன றாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திரு கோணமலை, மன்னார், யாழ்ப் பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.
கொழும்பு முதல் மொனறா கலை வரையிலுள்ள 11 மாவட்டங் களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல் இரத்தினபுரி வரை யுள்ள மாவட்டங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகா ணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேரும், வடக் கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக 1981- ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.
குருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில் தென்னந்தோப்பு உரி மையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம் கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும், தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும் உள்ளனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ் மற்றும் தமிழ ரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை, வசதி காரணமாக சிங் களவரோடும் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்ற னர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள் சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய் கின்றனர். பெரும்பாலான முஸ்லிம் களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.
இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப் போது வெறும் வியாபாரத் தொடர் போடுதான் அவர்கள் இருந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ் வது 9, 10, 12 ஆம் நூற்றாண்டுகளில் தான் தொடங்கியது. இதை இரண் டாவது நகரமயமாதல் என்று குறிப் பிடுகிறார்கள். மூன்றாவது நகரமய மாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.
இவர்களில் பெரும்பான்மை யோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற, ஜனநாயகப் பங்களிப்பவர்களில் முக்கியமானவர் களாகக் கருதப்படுகின்றனர்.
அம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனி களில் வேலை செய்யும்போது பெண் கவி புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக் காட்சியைக் கண்டு புல்லரித் துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண் களின் கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றி யிருக்கிறார்.
முஸ்லிம்களையும், தமிழர்களை யும் தனியாகப் பிரிக்க எண்ணிய சிங் கள அரசு, வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கி றார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி தமிழில்தான் வழங்கப்படுகிறது.
1981 கணக்கெடுப்பின்படி முஸ் லிம்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 11,34,556 ஆகும். இங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இலங்கை வாழ் முஸ்லிம்கள், "மூர்கள்" என்று இவர்களை குறிப் பிடுகிறார்கள்.
2. இந்திய அல்லது பாகிஸ்தானி முஸ்லிம்கள்.
3. மலேயா முஸ்லிம்கள்.
1) "மூர்கள்’ இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில் இருந் தும் வந்தவர்கள். இவர்கள் வியா பாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வர்கள்.
தென்னிந்தியாவில் இருந்து குடி யேறிய (காயல்பட்டணம், கீழக் கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாக வும், மீனவர்களாகவும் வாழ்கின்ற னர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும். இவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும் சாஃபிப் பிரிவைச் சார்ந்தவர்கள்.
2) இரண்டாவது பிரிவான இந் திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என் பவர் பெரும்பாலும், "மேமோன்" "போக்ராஸ்" மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து குடியேறிய வியாபாரிகள் ஆவர்.
இவர்கள் பெரும்பான்மையோர் "சாஃபி" பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் மேமோன் முஸ்லிம் கள் மட்டுமே "ஷியா" பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். மேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர் உருது மற்றும் குஜராத்தி யைப் பேசக் கூடியவர்கள்.
3) மூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் டச்சுக் காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார நிமித்தமாக குடி யேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மற்ற பிரிவினரைப்போல் அல்லாது திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள் கின்றனர்.
1. இந்திய, பாகிஸ்தானிய முஸ் லிம்கள் 34,195 பேர்.
2. மலேயா முஸ்லிம்கள் 43,378.
3. மூர்கள் 10,56,972.
ஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று குழுக்களும் படை யெடுப்பால் வந்து குடியேறியவர் கள் அல்ல. இவர்கள் இலங்கையில் தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர் களது மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.
சிலர் விவசாய சமூகத்தில் இரு ந்தபோதும் பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.
நகர முஸ்லிம்களில் பெரும்பான் மையோர் வர்த்தகர்களாகவும் சிறு பான்மையோர் தொழிலாளிகளாக வும் உள்ளனர்.
இதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில் தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால் தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலான முஸ்லிம்கள் கிராமப் புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும் மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர், மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர். கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு மிகக் குறைவு. சிங்கள மேலாண்மைக் கலாசாரம், இவர்களை "தம்பியா’ அதாவது கல்வி அறிவற்ற "நரித் தனம்" உள்ள வியாபாரிகள் என்று குறிப்பிடுகிறது.
இவர்கள் புத்த இனவெறி கலா சாரத்தால், அடிக்கடி இனவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர் கள். முதன் முதலில் போர்த்துக் கேயர் உள் நுழைந்தபோது அவர் களை எதிர்த்தவர்கள் இவர்களே.
எல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான எதிர்ப்பினைக் காட்டி யவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய ஆட்சியாளர் களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் "மதாரா’ என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் இதற்குச் சான்றாகும்.
புத்த மேலாண்மைக் கலாசார உணர்வால் "சிங்கள பெத்தயா’ என்ற பத்திரிகையில் அதன் ஆசிரிய ரான அநகாரிக தர்மபாலா, "முஸ் லிம் கடைகளை பகிஷ்கரிப்பவர்கள் மட்டுமே உண்மை தேச பக்தர்கள்" என்று எழுதுகிறார்.
அவர் மேலும் கூறுவதாவது
"பிரித்தானியருக்கு ஜெர்மானி யர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதி யர், சிங்களவருக்கு சமயத்தாலும், இனத்தாலும் மொழியாலும் அந் நியர்கள். பௌத்த சமயம் இல்லா விடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தி யோகஸ்தர்கள் சிங்களவரைச் சுட லாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்க லாம். ஆனால், எப்போதும் சிங்கள வருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவ மானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்து விட்டனர். முழு தேசமும் முஸ்லிம் களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட் டது. இதற்கு பொருளாதார ஆன்மீக ரீதியிலான காரணங்கள் இருந்தன’ - என்று முஸ்லிம்கள்மீது வெறுப் பைக் கொட்டுகிறார்.
முஸ்லிம்கள் மீது சிங்களவர் களால் நடத்தப்பட்ட முதலாவது வகுப்பு மோதல் 1915இல் ஆகும். 1948க்குப் பின் சிங்கள புத்த அரசு அதிகாரம், இவர்களை வாழ்க்கை யில் சமூகப் பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கான எந்த வகையிலும் உதவி செய்யாமல் இருந்ததோடு 1958 தமிழ் எதிர்ப்புக் கலவரத்தில் இவர்களைப் பாதிப்படையவும் செய்தது.
1970இல் ஒரு மிகுந்த அபாயகர மான நிலையை இவர்கள் அடை கிறார்கள். ஏழாண்டு காலத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வன்முறை வெறியாட்டம் தீவிரமாகி யது. புத்தளம் படுகொலை மிகப் பெரிய ஒன்றாகும். அது 1976இல் நடந்தது. அப்போது சிங்கள அரசு ராணுவத்தின் உதவிகொண்டு மசூதி யில் தொழுகையில் இருந்த 7 முஸ் லிம்களைப் படுகொலை செய்த தோடு 271 வீடுகளையும், 44 கடை களையும், இரண்டு தொழிற்சாலை களையும் தீக்கிரையாக்கியது. மேலும் இரு மசூதிகளும் இடித்துத் தள்ளப்பட்டன.
நன்றி: மீள் பார்வை.நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்