இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கும் லால்பேட்டைக்கு தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் அவர்களின் வருகையில் கல்வித்துறை கட்டாயம் இடம் பெற்றிருந்தது என்பது உலகறிந்த உண்மை!
ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.
ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.
பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.
வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.
மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .
சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.
அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.
ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!
இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.
மாறா அன்புடன்,
ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.
நிர்வாகி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்