ஆர்.எஸ்.எஸ், சங்பாரிவார் அமைப்புகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்!

திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் லிபரான் ஆணைப்படி மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முபாரக் தலைமை வகித்து பேசுகையில்: ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டங்கள் இந்தியாவில் மதகலவரங்களைத் தூண்ட திட்டமிட்டு வருகின்றனர்.


எனவே மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டங்களைக் கண்காணிக்க வேண்டுமென பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். நிறைவாக சவுகத்அலி நன்றி கூறினார்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.