Breaking News
recent

காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி சிங்கப்பூர் வருகை

காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி சிங்கப்பூர் வருகை

மேல்விஷாரம் இஸ்லாமியக் கல்வி அகாடெமியின் நிர்வாக மேலாளரும், சிறந்த இஸ்லாமிய அறிஞருமான காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி அவர்கள் சிங்கப்பூருக்குக் குறுகிய கால விஜயம் மேற்கொண்டார்.

ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா அவர்களின் அழைப்பில் வருகை தந்த அன்னார் மஸ்ஜித் பென்கூலனில் ஜனவரி முதல் நாள் ஜும்மா உரை நிகழ்த்தினார். சனிக் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் 'ஹிஜ்ராவின் படிப்பினைகள்' என்ற தலைப்பில் அவர்கள் ஆற்றிய உரை கருத்தாழமிக்கதாகவும், இளந்தலைமுறைக்கு இஸ்லாதின் வரலாற்றுப் பதிவுகளைக் கற்பிப்பதாகவும் அமைந்தது.

அன்றிரவு இஷாவுக்குப் பின் பாகவி ஸாகிப் அவர்கள் தலைமையில் பென்கூலன் பள்ளிவாசல் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஒய். முஹம்மது
ரபீக், உஸ்தாத் ஜஃபருல்லாஹ் ரஹ்மானி, டாக்டர் ஹிமானா சையத் ஆகியோருடன் ஆர்வமிக்க இளஞர்கள் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி கருத்துச் செறிவுமிக்கதாகவும், தேர்ந்த பயிற்சி முகாமாகவும் அமைந்தது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.