Breaking News
recent

தாக்கரேயின் தாதர் கோட்டையில் இனவெறியும், மொழிவெறியும்.அதிரை ஏ.எம்.பாரூக்தாக்கரேயின் தாதர் கோட்டையில்இனவெறியும்மொழிவெறியும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பம்பாய் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்ற அறிவிப்பு ராகுல் காந்தியிடமிருந்து வந்ததும் ராகுல் காந்தியை மிரட்டியதுடன் அவரது அன்னையாரை இத்தாலி தாய் என்று வழமைபோல் வசைப் பாடி தனது சீடர்களுக்கு அவர்கள் மீதான இனவெறியை ஊட்டி அவருக்கு கருப்புக் கொடி காட்ட தூண்டினார்இனவெறியர் பால்தாக்கரே.
தாக்கரேயின் தாதர் கோட்டையில்.
ராகுல் காந்தி அவர்கள் இவருடைய மிரட்டலை சவாலாக எடுத்துக் கொண்டு பாதுகாப்பின்றியே பம்பாய்க்கு சென்று அதுவும் சிவசேனை குண்டர்களின் கோட்டையாகிய தாதரில் மக்களுடன் மக்களாக கலந்து இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்து விட்டு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து விட்டு திரும்பியதுடன் பம்பாய் மராட்டியர்களுக்கு சொந்தம் என்ற பால்தாக்கரேவின் நச்சுக் கருத்துக்கு எதிராக ஒட்டு மொத்த இந்தியர்களும் களமிறங்கி எதிர்க்க வேண்டும் என்றும் தெரித்துக் கொண்டார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=545229&disdate=2/6/2010
பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுத்தால் பம்பாய் பற்றி எரியும் அவர் ஒரு நடமாடும் வெடிகுண்டு என்று கருதிக் கொண்டு அவர் எதைப் பேசினாலும்அவரது சாம்னாவில் எதை எழுதினாலும் அதை எதிர்த்து அறிக்கை விடவோஅல்லது அதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ அறவேத் திராணியற்ற அரசு அதிகாரிகளுக்கும்அரசியல்வாதிகளுக்கும் மத்தியில்  ( அதுவும் தேவைப்படும் பொழுதெல்லாம் பாம்புக்கு வாலையும்மீனுக்கு தலையையும் ஆட்டும் மதச்சார்பின்மை வேடமிடும் ) காங்கிரஸில் ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராக ராகுல் காந்தியை காண்கிறோம். அவரது பால்தாக்கரே விஷயத்திலான இந்த துணிச்சலான முடிவை வரவேற்கிறோம்.
முஸ்லீம்கள் மீது தாக்குதல்  ?
பாபர் மசூதி இடிப்பில் உலக மக்களில் அதிகமானோர் ஹிந்துக்கள் உட்பட தங்களது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிந்து கொண்டிருந்த பொழுது பால்தாக்கரேயின் இனவெறி கும்பல் மட்டும் முஸ்லீம்கள் மும்பையில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றப் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டு மராட்டிய போலீஸ் துணையுடன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்களை ஈவிரக்கமின்றி கொலை செய்து அவர்களது பொருளாதாரத்தை சூறையாடினார்கள். 
ஹிந்துக்கள் மீதும் தாக்குதல் !
பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம் என்ற காட்டுக் கூச்சல் போடுவதுடன் நிருத்திக் கொள்ளாமல் அவ்வப்பொழுது வெளி மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள், மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் நடத்தும் சிறிய,பெரிய தொழில் நிருவனங்கள்மற்றும் சினிமா தியேட்டர் உட்பட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி விற்பனை பொருட்களை சூறையாடிச் செல்வர். இதில் எப்பொழுதாவது ஒரு முறை  முன்கூட்டியே பேசி செட்டப் செய்து வைத்திருந்த மராட்டியப் போலீஸ் கண்துடைப்பிற்காக மக்கள் பார்க்கும் விதமாக அவர்களை வேனில் ஏற்றிச் சென்று சிறிது தூரத்தில் இறக்கி விட்டு விடுவார்கள்.
ஹிந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து நில்லடா !! என்று இந்தியாவின் எந்த மூளையிலும் ஹிந்து மக்கள் மார் தட்டி கோஷமிடலாம். ஆனால் பம்பாயில் மட்டும் முடியாது
காரணம்
மராட்டி என்று சொல்லடா !! மார்தட்டிக் கொள்ளடா !! எனும் சிவசேனாக்களின் கோஷத்திற்கு முன் ஹிந்து என்ற கோஷம் செல்லாக் காசாகி விடும்.
துறவிகளையும் விட்டு வைக்கவில்லை.
சமீபத்தில் பம்பாயில் கோயில் வளாகம் ஒன்றின் ஓரத்தில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஹிந்துத் துறவிகளின் மீது இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் கொலைவெறிதாண்டவமாடியது. வீடியோவைப் பார்வையிடவும்.  http://www.tntj.net/?p=8956
இந்த துறவிகள் மொத்த மஹாராஷ்டிராவில் பாதியை தங்களுடைய பெயரில் பத்திரப் பதிவு செய்து கேட்டு நாள் தோறும் கொடிப் பிடித்து அணி வகுப்பு நடத்தியதில்லை. மாறாக சான் வயிற்றுக்காக நாள் தோறும் திருவோடும்தெருவீதியுமாக திரிபவர்கள் இரவு நேரத்தில் எவருடைய வீட்டு வாசல் திண்ணையிலோ,அல்லது கடைவீதியின் பிளாட்பாரங்களிலோ உறங்கினால் போலீஸ் அடித்து விரட்டும் என்றஞ்சி அதிகபட்சம் தெய்வத்தின் சன்னிதியையே இவர்கள் ஓய்வெடுப்பதற்காக தேர்வு செய்வார்கள்.
அவ்வாறு கோயிலே சிறந்த பாதுகாப்பென்றுக் கருதி கோயிலின் உட்புறத்தில் அல்லாது வெளிச்சுவர் ஓரமாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அப்பாவி ஹிந்துத் துறவிகள் மராட்டியர்கள் அல்லமராட்டி மொழிப் பேசுபவர்கள் அல்ல என்ற ஒரேக் காரணத்திற்காக அவர்களின் மீது கண்மூடித்தனமாக தடியடிப் பிரயோகம் நடத்திய காட்டுமிராண்டிகள் மனித இனமா ?  
நாய் இனம்.
ஒரு ஏரியாவைச் சேர்ந்த நாய்கள் ஒன்றுக் கூடி ஓரிடத்தில் உணவை உண்று கொண்டிருக்கும் பொழுது அடுத்த ஏரியாவைச் சேர்ந்த நாய் ஒன்று அங்கு வருவதைக் கண்டால் நம்முடைய ஏரியாவின் உணவில் பங்கிடவே அந்த நாய் வருகிறது என்று கருதிக் கொண்டு கூடி நின்ற இனவெறி நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு தனித்து வரும் நாயை கடித்துக்குதறி விடும்.
நாயின் குணம் நாயறியும் என்பதால் தன் ஏரியாவை விட்டு வேறொரு ஏரியாவை நோக்கி தனித்துச் செல்லும் நாய் வழியில் எங்காவது இனவெறிப் பிடித்த நாய்கள் கூடிநிற்பதைக் கண்டால் அதுவரை எவருக்கும் மடக்காத தனது கம்பீரமான வாலை அங்கு மடக்கி சமாதான சமிக்ஞை செய்து கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும்.
மஹாராஷ்டிராவில் விழும் பிச்சைக் கூட மராட்டியனின் திருவோட்டில் தான் விழ வேண்டும் என்று நினைதது அப்பாவி ஹிந்துத் துறவிகளை நள்ளிரவில் ஓடஓட அடித்து விரட்டிய சிவசேனை இனவெறி கும்பல் நாய் இனத்திற்கு ஒப்பானவர்கள் என்றும் உவமைக் கூறினால் நாய் இனம் வருத்தப்படும் காரணம் உணவை பங்கிட்டுக் கொள்வதில் மட்டும் இனவெறி காட்டும் நாயிடத்தில் வேறுப் பல சிறப்பம்சங்களும் அமையப் பெற்றிருக்கின்றனசிவசேனை காட்டுமிராண்டி கும்பலிடம் இனவெறிமொழிவெறிக்காக கொலைவெறித் தாண்டவமாடுவதைத் தவிற வேறு எந்த சிறப்பமசமும் அறவே கிடையாது என்பதால் நாயை விடக் கீழான ஒன்றைத் தேடியே இவர்களுக்கு ஒப்புவுவமை கூறவேண்டும்
ஒன்றுப்படுவதே சிறந்த தீர்வு !
பிற சமுதாய மக்களின் மீது மட்டும் தவறான தகவல்களின் அடிப்படையில் வெறுப்புணர்வு கொள்பவர்களை சத்தியத்தை எடுத்துக்கூறி தவறான சிந்தனையை மாற்றி விடலாம். ஆனால் தனது சொந்த சமுதாயத்தவர்களிடமும் கூட இனவெறிமொழி வெறிப்பிடித்து கொலைவெறியில் ஈடுபடுபவர்களை இந்தியாவின் அனைத்து மக்களும் அரசு கேந்திரங்கள்ஊடகங்கள் உட்பட ஒருங்கிணைந்து சுதந்திர வரலாற்றை எடுத்துக் கூறி சுதந்திரத்திற்காக உயிர் நீத்த உத்தம தியாகிகளின் வரிசுகளே பம்பாய் நகரை உலக அளவில் தலைநிமிறச் செய்து கொண்டிருப்பவர்கள் என்கின்ற சத்தியத்தை எடுத்தக் கூறி பம்பாய் எங்களுக்கே சொந்தம் எனும் நச்சுக்கருத்தை முறியடித்து இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்த்துவதற்கு முன்வரவேண்டும்.
நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில்
இந்தியாவில் ஆரியர்களால் அனுஷ்டிக்கப்படும் சாதி வெறிதாக்கரே வைகையறாக்களால் அனுஷ்டிக்கப்படும் இனவெறிமொழிவெறியைப் போன்றே உலகில் நாகரீகத்தின் உச்சானிக்கொம்பில் வீற்றிருப்பதாக பீற்றிக்கொள்ளும் அமெரிக்காஐரோப்பாவில் அனுஷ்டிக்கப்படும் நிறவெறியால் ஏராளமான கருப்பின மக்கள் இன்றளவும் காவு கொள்ளப்பட்டிக் கொண்டிருக்கன்றனர் இவர்கள் நாகரீகம், மனித உரிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் திறந்த வெளி பாலியல் கலாச்சாரத்தை தான்.
உலக அமைதிக்கு தீர்வு கண்ட இஸ்லாம்.
இன்று உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிக்கும் பாங்கோசை கருப்பு நிற அடிமை கோத்திரத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களைக் கொண்டு இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒலிக்கச் செய்து நிறவெறியை காலில் போட்டு மிதித்தார்கள். இதனால் உலகம் முடியும் காலம்வரை பாங்கொலி கேட்கும் மக்களின் மனங்களிலிருந்து நிறவெறி தூரச் சென்று கொண்டே இருக்கும்.
ஸஃபா – மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே இறைவனின் உதவியைத் தேடி அங்குமிங்கும ஓடிய அடிமை கோத்திரத்தைச் சேர்ந்த அன்னை ஹாஜரா அவர்களின் காலடித் தடத்திலிருந்தே புனித ஹஜ்யாத்திரைக்காக வரும் உலக மக்களை ஓடச்செய்து சாதிவெறியை காலில் போட்டு மிதித்தார்கள். உலகம் முடியும் காலம் வரை மக்கள் ஸஃபா  – மர்வா மலைக்குன்றுகளில் ஓடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் மக்களின் மனங்களிலிருந்து சாதி வெறி தூரச் சென்று கொண்டே இருக்கும்.
உலக மக்களின் அமைதிக்கு அளப்பரிய தீர்வை வழங்கிய அண்ணலார் அவர்களின் மறைவிற்குப் பின் மக்கள் இதை மறந்து விடக் கூடாது என்பதற்காக மக்கள் ஒன்று திரண்டிருந்த ஹஜ்யாத்திரயின் அங்கமாகிய அரஃபா பெருவெளியில் குழுமி இருந்த பொழுது மனிதாபிமானத்தை வலியுருத்தி உள்ளத்தை நெகிழச் செய்த உருக்கமானப் பேருரையில கீழ்காணுமாறும் முழங்கினார்கள்.
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர் !
மக்களே !
Ø  பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர் !
Ø  உங்களது இறைவன் ஒருவனே !
Ø  உங்களது தந்தையும் ( ஆதம் அலை) ஒருவரே !
அறிந்து கொள்ளுங்கள் !
Ø  எந்த ஒரு அரபிக்கும் அரபி அல்லதாவரை விடவோஎந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியரை விடவோ உயர் தகுதியும்தனிச் சிறப்புமில்லை, 
Ø  எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோஎந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ உயர் தகுதியும்தனிச் சிறப்புமில்லை, 
Ø  இறைவனிடத்தில் சிறந்தவர் இறைசச்முயைடைவரே. 
என்று அகிலம் அனைத்திற்கும் அறிவொளிச் சுடராக அனுப்பப்பட்ட அண்ணலார் அவர்கள் கூறியதுடன் அவற்றை எனது காலுக்கு கீழ் போட்டு மிதிக்கின்றேன் என்றும் கூறியதால் அண்ணல் அவர்களின் சொல்,செயல்அங்கீகாரத்தை பின்பற்றியொழகும் மக்களாகிய நாமும் அவற்றை காலுக்கடியில் போட்டு மிதிக்கின்றோம்.
உலகில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் அண்ணல் அவர்கள் காலுக்கு கீழ் போட்டு மிதித்த இனவெறி,மொழிவெறிசாதிவெறிகளை காலுக்கு கீழ் போட்டு மிதப்பதாக சபதம் எடுத்துக் கொண்டால் உலகம் அமைதிப் பெறும். உலகம் அமைதி பெறுவதற்கு இதைத் தவிற வேறெதுவும் இறுதி தீர்வாக அமையவே அமையாது.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.