Breaking News
recent

நற்செய்தியும் எச்சரிக்கையும் - அப்துர்ரஹ்மான் மண்பஈ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

நற்செய்தியும் எச்சரிக்கையும்


நற்செய்தி கூறி எச்சரிக்கை செய்து நல்வழிப்படுத்துவது நபியின் வழி, அந்த வழியில்,சமீபத்திய நிகழ்வுகளை வைத்து பிரபல பேச்சாளர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு இந்த நற்செய்தியையும் எச்சரிக்கையும் வழங்குகிறோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லப்படுவோருடன் பீ.ஜைனுலாபிதீன் தனது குழுவினருடன் விவாதம் செய்தார்கள்.அதில் நாத்திகத்திற்க்கு எதிரான பல நல்ல கருத்துக்களை எடுத்து வைத்தார்கள் அதற்க்காக அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி கொடுக்கட்டும்!

நற்செய்தி :

அந்த விவாதத்தின் முதல் தலைப்பில் முதல் சுற்று பேச்சிலேயே ஜைனுலாபிதீன் தான் நாத்திகக் கொள்கைக்கு சென்று விட்டுமீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியவர்தான் என்ற செய்தியை சொன்னார்கள்.

இது அவருக்கு அல்லாஹ் செய்துள்ள பேரருளாகும். இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பது அவர்களுக்கும் சுபச் செய்திதான்.

அல்லாஹ்வையும் மறுமையையும் மறுத்து காஃபிராக தான் மாறி விட்டு மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியதாக அவரைப் போன்ற அந்தஸ்திலுள்ள யார் தான் ஒப்புக் கொள்வார் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அல்லாஹூதாஆலா அனைத்து முஸ்லீம்களுக்கும் முஸ்லிம்களாகவே மரணிக்க நல்லுதவி செய்வானாக!

எச்சரிக்கை

அவர் தன்னைப்பற்றி வெளியிட்ட செய்தியின் மூலம் அவருடைய பெரிய பலவீனம் வெளிபட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வைப்பற்றியும் அவனது மார்க்க விசயத்திலும் நிதான மின்றியும் அலட்சியத்தோடும் முடிவு சொல்கிற தன்மை. இந்த தன்மை இருந்ததால் தான் அவசரப்பட்டு சத்திய இஸ்லாத்தை விட்டு நாத்திகத்தைத் தேர்ந்தெடுத்த மாபெரும் தவறை செய்தார்.

அவர் அந்த தவறிலிருந்து விடுபட்டாலும் அந்த தவறுக்கு காரணமாக இருந்த தன்மையிலிருந்து விடுபடவில்லை.அது தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் மக்களுடன் அவர் செய்யும் சச்சரவுகளுக்குக் காரணம்

நிதானமில்லாமலும் அலட்சியத்தோடும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அணுகும் போக்கிலிருந்து முதலில் அவர் விடுபட வேண்டும்.

நன்றாக யோசித்து பார்ப்போம் முஸ்லிம்களிடத்திலே நிலவுகிற மூடப்பழக்கங்களினாலும் அவர்களிடத்திலே காணப்படும் கருத்து வேற்றுமைகளினாலும் எவ்வளவோ முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகத்தான் செய்கிறார்கள்.அப்படி குழப்பத்திற்க்கு ஆளாகக் கூடியவர்கள் எவரும் நாத்திகக் கொள்கைக்கு ஓடி விடுவதில்லை. மார்க்கத்தை அலட்சியமாக பார்த்துக் கொண்டும் கடமையான வணக்கங்களைக்கூட நிறைவேற்றாமலும் இருக்கும் சிலர் வேண்டுமானால் அப்படி ஓடலாம்!

ஆக நிதானமின்மை,மார்க்கத்தை பேணுதல் இல்லாமல் அலட்சியமாக அணுகுவது ஆகிய தன்மைகளால் அவர் நாத்திக கொள்கைக்குச் சென்றார். பிறகு நாத்திகம் என்ற தவறை விட்டாரே தவிர அந்தத் தவறுக்கு அவரை கொண்டு சென்ற இந்த மோசமான தன்மைகளை விடவில்லை. அதனால் மார்க்கத்துக்குள் இருந்து கொண்டு குர்ஆன், ஹதீஸூக்கு எதிரான கொள்கைகளை புகுத்துகிற செயலில் ஈடுபடுகிறார்.அவர் நிதானமற்ற தன்மையாலும் மார்க்கத்தை அலட்சியமாக கருதும் தன்மையாலும் தவறான கொள்கையை புகுத்துபவர் என்பதற்க்கு அவரது எழுத்துக்களே ஆதாரமாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை மறுப்பதற்கு முக்கிய காரணமாக, குர்ஆனின், அல்லாஹ் உன்னை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் எனும்(5:67)வசனத்துக்கு அந்த ஹதீஸ் முரண்படுவதாக எழுதியிருந்தார்(அவரது தாஜிமா குறிப்பு எண் 357முதல் பதிப்பு)

ஆனால் இப்போதைய புதிய (7வது8வது)பதிப்புகளில் இதை காணவில்லை. அதாவது இவர் கருத்துப்படி இந்த குர்ஆன் வசனத்துடன் மோதிக்கொண்டும் முரண்பட்டுக்கொண்டும் இருந்த அந்த ஹதீஸ் இப்போது முரண்படவில்லை,மோதவில்லை.

அப்படியானால் ஓரு ஹதீஸைப் பற்றி பேசுகிறோம் என்கிற பேணுதல் இல்லாமல் அவசரத்தோடும் அலட்சியத்தோடும் பெறுந்தவறு செய்திருக்கிறார்.

எப்படி சம்பந்தப்பட்ட சூனியம் பற்றிய ஹதீஸ் 5:67 வசனத்துக்கு முரண்பட வில்லை என்கிற உண்மையை தெரிந்து கொண்டாரோ அது போல் அவர் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் மற்ற வசனங்களோடும் முரண்படவில்லை என்பது குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலைப்பாடு.

நிதானத்தோடு வரட்டுப்பிடிவாதத்தை விட்டு நல்வழியை நாடினால் நல்லமுடிவு கிடைக்கும்.சூனியம் பற்றிய ஹதீஸில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு புகாரியின் மிகச்சிறந்த விளக்கவுரையாகிய ஃபத்ஹீல் பாரீ யில் தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த ஹதீஸை மறுப்பவர்கள் 'பித்அத்துக்காரர்கள்'(அதாவது மார்க்கத்தில் தவறான கொள்கையை புகுத்துவர்கள்) என்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அதில் சாடியிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்டஹதீஸ் 5:67 வசனத்துடன் முரண்படவில்லை என்பதைத் தெரிந்தவுடன் வாபஸ் வாங்கிக் கொண்டேன். மற்ற வசனங்களுடன் முரண்படுவதால் தான் வாபஸ் வாங்கவில்லை என்று இவர் தரப்பில் கூறலாம். உண்மை என்னவென்றால் இலகுவாக எல்லோரும் இவரது வாதம் தவறு என்று கருதும் படியான வாதத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார். தன் வாதம் தவறு என்றாலும் எதையாவது சுற்றி வளைத்துப்பேசி தாக்கு பிடிக்க முடியுமென்றால் அதைவைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவு தான்.

குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து இவரால் மறுக்கப்படும் ஹதீஸ்களுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுகொண்டுமிருக்கிறது.

அந்த விளக்கங்கள் எல்லாம் அவசரப்பட்டு நாத்திகத்திற்கு ஓடாத, குர்ஆன் ஹதீஸை இனிமையாகப் பேசும் வழிகெட்ட பேச்சாளர்களிடம் ஏமாறாத எல்லா முஸ்லீம்களுக்கும் திருப்தியளிக்கிறது.

ஆக இவர் நாத்திகம் என்ற அழிவிலிருந்து விடுபட்டாலும் அந்த அழிவுக்கு அவரை கொண்டு சென்ற தீய தன்மைகளிலிருந்து விடுபடவில்லை.

அதனாலேயே பல பெரிய தவறான கொள்ளைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள் எல்லாமதத்தவர்களோடு சேர்த்து முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்ப்பது போல் இவரின் தவறான கருத்துக்களை எதிர்க்கும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்க்கிறார்கள் இவரும் இவரது ஆதரவாளர்களும்.

அவர் வெளியிட்டுள்ள இவ்வாறான மகாதவறுகள்:-

ழூ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து மறுப்பது. அதற்கு முறையான பதில் அளிக்கும் முஸ்லீம்களை எள்ளி நகையாடுவதுடன் இதே காரணம் கற்பித்து மறுப்பதற்காக வேறு ஹதீஸ்களையும் தேடி எடுப்பது.
ழூ பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன் தங்களின் முகத்தை மறைப்பது கட்டாயம் என்று இல்லாவிட்டாலும் அப்படி மறைப்பதை நபி(ஸல்) அவர்கள் அங்கிகரித்ததும் நபியுடன் இருந்த ஸஹாபியப் பெண்கள் மறைத்ததும் மிக வலுவான ஆதாரங்களாக பதியப்பட்டிருக்கின்றன.

ஆனால் அப்படி மறைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பழக்கம் என்பது போலவும் மறைப்பதே தவறு என்றும் சித்தரிக்கிறார் அவர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மனைவியர் உண்மையான வெட்கத்தினால் அன்னிய ஆடவருக்கு முன் முகத்தை மறைப்பதை தடுக்கிறார்கள்.

ழூ வருடா வருடம் ஜகாத் கொடுப்பதை பித்அத் என்று கூறி தடுப்பது.

இதுபோல பல ஆபத்தான தவறுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் அவர் நாத்திகத்துக்குச் செல்ல காரணமாக இருந்த தீயத் தன்மைகள் அவரிடம் இருந்து கொண்டிருப்பது தான் ஆகவே அந்த தன்மைகளையும் அவர் விட்டொழிக்க வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் பல வினோத வழிகேடுகளை அவிழ்த்து விடலாம். அதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா முஸ்லீம்களையும் அவனது தண்டனையிலிருந்து காப்பானாக.
முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

1 கருத்து:

  1. அட நீங்கவேற அந்த கூட்டம் நடைபெற்ற சமயத்தில் பர்ளான தொழுகைகள் விடப்பட்டதுவே அதுபற்றி தெரியுமா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.