அதிரையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக தலைவர் அயுப் தலைமை வகித்தார். ஹாஜி முஹம்மது இக்பால், ஹாஜி அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய தமிழ் இலக்கிய களாக பொது செயலாளர் சாயபு மறைகையர் வரவேற்றார். வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார்.
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், பெரியார் கருவூலம், தந்தை பெரியார் சிந்தனை களஞ்சியம், காதை மஸ்தான் ஆற்று படை, மும்மணிமாலை, ஆளுமை வளர்ச்சி பு மழை பொழியும், ராஜமடல், பத்ரு களம் கண்ட பார் போற்றும் நபிகள் உள்ளிட்ட நூல்கை வணிக வரித்துறை அமைச்சர் உபயதுல்லாஹ் அறிமுகம் செய்தார்.
இந்த விழாவில் எம்.எல்.எ. ரெங்கராஜன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப், காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் அப்துல் காதர், கலீல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்