பெண்களுக்கென்று தனி மார்க்கெட் ஒன்று ஊரின் நடுவே இருப்பது மிக அவசியம்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்களே மார்கெட் சென்று மீன்,காய்கறி,இறைச்சி போன்றவைகளை வாங்கும் சூழ்நிலை இருப்பதால்,நடுத்தெரு போன்ற தெருவில் மார்கெட் இருந்தால் நல்லது.
ஏனெனில் தற்போது பெண்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டு மெயின் ரோட்டில் உள்ள (கரையூர் தெரு)மார்கெட் சென்று பொருட்களை வாங்கிவருகின்றனர்.இதனால் நம் பெண்களின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது.எனவே இதற்கு நம் ஊர் மக்கள் சிந்திப்பார்களா?
மேலும் தற்போது ஷாதுலியா பள்ளி இருந்த இடத்தில் கபறுஸ்தான் வர ஏற்பாடு நடக்கிறது.அந்த இடத்தை பெண்கள் மார்கெட்டுக்கு என ஒதுக்கிவிட்டு,சி எம் பி லைன் பக்கம் (மரைக்காயர் குளம்,காட்டுக்குளம்)கபறுஸ்தான் வர ஏற்பாடு பண்ணினால் அந்த பகுதி மக்களின் சிரமம் குறையும்.ஏனெனில் அந்த பக்கம் ஊர் பெரிதாகிக் கொண்டு போவதால் - மைய்யித்தை கொண்டுவந்து அடக்க சிரமமாக உள்ளது.
மேலும் தற்போதுள்ள தக்வா பள்ளி கபருஸ்தானை செம்மைப்படுத்தி,ஒழுங்குபடுத்தினால் இன்னும் பல மையத்துகளை அடக்க முடியும்,இன்ஷா அல்லாஹ்.
எனவே,சி எம் பி லைனில் கபறுஸ்தான் கொண்டு வரவும்,சாதுலியா பள்ளியை பெண்கள் மார்கெட்டாக ஏற்படுத்தவும் முயற்சிக்கலாமே?
கருத்து : உ.மு.அப்துல் ஜப்பார்,(நடுத்தெரு)
நியூ யார்க்
இதன் சாதக - பாதக அம்சங்களை சகோதரர்கள் பின்னூட்டமிட்டால் இன்ஷா அல்லாஹ் அதன் மூலம் ஒரு நல்ல யோசனை-தீர்வு பிறக்க வாய்ப்புண்டு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பெண்கள் மார்கெட் காட்டுப்பள்ளி தர்ஹா வளாகத்தில் அமைந்துள்ளதே, இதற்காக கரையூர் தெரு போகவேண்டிய அவசியம் இல்லியே. சில பெண்கள் கரையூர் தெரு சென்றால் விலை மலிவா வாங்களாம் என்ற எண்ணத்தில்தான் செல்கின்றனர், அதற்காக செலவிடப்படும் ஆட்டோ செலவை கணக்குப்பன்ணிப்பார்த்தால் இங்கேயே வாங்குவது தேவலம் போல
பதிலளிநீக்கு