Breaking News
recent

போலி வலைப்பூவை நிறுத்துக!ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேண்டுகோள்!

போலி வலைப்பூவை நிறுத்துக!ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேண்டுகோள்!!

கடந்த 25 அக்டோபர், 2010 திங்களன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி வலைப்பூ;எச்சரிக்கை ரிப்போர்ட்! என செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்கு அந்த போலி வலைப்பூவினர் நமக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று(25 புதன்கிழமை) ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் ஆலோசனையின் முடிவாக போலி வலைப்பூவை நிறுத்தக்கோரி மேதகு அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். திடீரென்று முகிழ்த்த உங்களின் வலைத்தள முயற்சியும், அதனைத் தொடர்ந்து, இன்னொரு வலைத்தளத்தில் பதிவான ஆட்சேபனையும், அதற்கு உங்களின் மறுப்பும் என் பார்வையில் பட்டன.

ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் ஓர் இணையதளம் உருவாக்க நான் பணிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு வலைத்தளம் அந்தச் சங்கத்தின் பெயரிலேயே திடீரென வந்திருப்பது, நிர்வாகிகளுக்கு வியப்பையும், எனக்கு ஆர்வக் குறைவையும் ஏற்படுத்தியுள்ளது!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முஹல்லாக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட வலைத்தளம் என்றும் அறிவிப்புச் செய்துள்ளீர்கள். ஆனால், அத்தகைய பங்களிப்பாளர்கள் யார் யார் என்ற விவரமில்லை! பரவாயில்லை. நடந்தவரை இருக்கட்டும்.

ஷம்சுல் இஸ்லாம் சங்கமே இணையதளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அதில் சங்கத்தின் அனுமதியோடு கூடிய செய்திகள் வெளியிடப்பட இருப்பதால், தயைகூர்ந்து உங்கள் வலைத்தளத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது இந்த வேண்டுகோலில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், கீழ்க்காணும் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்க:

தலைவர்: ஹாஜி முஹம்மது உமர்-9444039711
து.தலைவர்: ஹாஜி ஷிஹாபுத்தீன்-9840078678
செயலர்: ஹாஜி அபுல்ஹசன்-9786421535
து.செயலர்: ஹாஜி பாக்கர்-9787198883

மிக்க அன்புடன்,
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com
9894989230
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.